5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களின் மலைப்பகுதியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம்


கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களின் மலைப்பகுதியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்த மையத்தின் இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் வெள்ளிக்கிழமை கூறியது:
மேற்கு திசைக்காற்று வலுவடைந்து தொடர்ந்து நீடிப்பதால், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மாலை, இரவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
சின்னக்கல்லாறில் 260 மி.மீ.: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 260 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com