கேரளத்துக்கு ரயிலில் சென்ற 2.90 லட்சம் லிட்டர் தாமிரவருணி குடிநீர்'

திருநெல்வேலியில் இருந்து கேரளத்துக்கு ரயில் மூலம் 2.90 லட்சம் லிட்டர் தாமிரவருணி குடிநீர் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் கேரளத்துக்கு கொண்டு செல்லப்பட்ட தாமிரவருணி குடிநீர்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் கேரளத்துக்கு கொண்டு செல்லப்பட்ட தாமிரவருணி குடிநீர்.


திருநெல்வேலியில் இருந்து கேரளத்துக்கு ரயில் மூலம் 2.90 லட்சம் லிட்டர் தாமிரவருணி குடிநீர் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
கேரளத்தில் தொடர்ந்து பெய்த மழையால் இடுக்கி, பத்தனம்திட்டை, கோட்டயம், கொல்லம், வயநாடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் உணவுப் பொருள்கள், ஆடைகள், மருந்துகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு சரக்கு ரயில் மூலம் தாமிரவருணி குடிநீர் திங்கள்கிழமை கொண்டு செல்லப்பட்டது. 10 ஆயிரம் லிட்டர், 5 ஆயிரம் லிட்டர் பிளாஸ்டிக் டேங்குகளில் 7 வேகன்களில் தாமிரவருணி குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து ரயில்வே துறையினர் கூறியது: 
முதல் கட்டமாக தாமிரவருணி குடிநீர் கேரளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்திற்கு இந்த குடிநீர் செல்கிறது. அங்கிருந்து மாநில அரசின் உத்தரவின்பேரில் தேவையான மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். இதேபோல மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக குடிநீர் பாட்டில், பிஸ்கெட் உள்ளிட்டவையும் அனுப்பப்பட்டன என்றனர்.
திருநெல்வேலி நயினார்குளம் காய்கனி சந்தையில் இருந்து கத்தரி, தக்காளி, தடியங்காய் உள்பட பல்வேறு வகையான காய்கனிகள் புனலூர், கொட்டாரக்கரை, காயங்குளம், கொல்லம் உள்ளிட்ட சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். ரயில்கள், லாரிகளில் இவை செல்லும். வெள்ளம் காரணமாக, கடந்த 10 நாள்களாக காய்கனி ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com