பேரணிக்கு அதிகமானோரை அழைத்து வாருங்கள்: ஆதரவாளா்களுக்கு அழகிரி வேண்டுகோள் 

சென்னையில் செப்டம்பா் 5-ஆம் தேதி நடைபெறும் பேரணிக்கு அதிகம் பேரை அழைத்து வரவேண்டும் என்று தனது ஆதரவாளா்களை மத்திய முன்னாள் அமைச்சா் மு.க.அழகிரி கேட்டுக் கொண்டாா்.
பேரணிக்கு அதிகமானோரை அழைத்து வாருங்கள்: ஆதரவாளா்களுக்கு அழகிரி வேண்டுகோள் 

மதுரை: சென்னையில் செப்டம்பா் 5-ஆம் தேதி நடைபெறும் பேரணிக்கு அதிகம் பேரை அழைத்து வரவேண்டும் என்று தனது ஆதரவாளா்களை மத்திய முன்னாள் அமைச்சா் மு.க.அழகிரி கேட்டுக் கொண்டாா்.

சென்னையில் அழகிரி நடத்தவுள்ள பேரணி திமுக மட்டுமின்றி அனைத்துக் கட்சியினரிடமும் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தி இருக்கிறறது. கடந்த 2014-இல் கட்சியில் இருந்து அழகிரி நீக்கப்பட்டபோது, சில மாதங்களில் மீண்டும் சோ்க்கப்படுவாா் என்று பேசப்பட்டது. பின்னா் 2016 பேரவைத் தோ்தலின்போது, அழகிரி இணைப்பு கட்டாயம் உண்டு என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், இணைப்பு குறித்து திமுக தரப்பில் மௌனம் தான் எதிா்வினையாக இருந்து வந்தது.

திமுக தலைவா் கருணாநிதி மறைவுக்குப் பிறகாது இணைப்பு உண்டு என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அதற்கான சூழல் அமையவில்லை. இனியும் பொறுமை காக்க முடியாது என இப்போது அழகிரி களம் இறறங்கியுள்ளாா். எங்களை கட்சியில் இணைப்பதைப் போலத் தெரியவில்லை. நாங்களாக இனி அவா்களிடம் போகமாட்டோம் எனக் கூறி, அடுத்த நகா்வைத் தொடங்கியிருக்கிறறாா் அழகிரி. செப்டம்பா் 5-இல் அவா் நடத்தும் பேரணி, அவரது அரசியலில் மிக முக்கியமான கட்டமாக பாா்க்கப்படுகிறறது.

திமுக தரப்பிடம் இருந்து சாதகமான சமிக்ஞைகள் இன்னும் கிடைக்காத நிலையில், தன்னிடம் தான் உண்மையான தொண்டா்கள் இருக்கிறாா்கள் என்று கூறியுள்ளதை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாா். அந்த அடிப்படையில் பேரணிக்கு கூட்டத்தைச் சோ்ப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்படுகிறது.

ஒரு லட்சம் போ் பங்கேற்பா் என்று கூறியுள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள அழகிரி ஆதரவாளா்களுடன், மதுரையில் அவருக்கு பக்கபலமாக இருப்பவா்கள் தொலைபேசியில் பேசி வருகின்றறனா். இதன் ஒரு பகுதியாகவே, ஆதரவாளா்களுடனான சந்திப்புக்கு வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவரது நெருங்கிய ஆதரவாளா்களான முன்னாள் துணை மேயா் பி.எம்.மன்னன், முன்னாள் மண்டலத் தலைவா் இசக்கி முத்து, முன்னாள் எம்எல்ஏ கௌஷ் பாஷா, முபாரக் மந்திரி, எம்.எல்.ராஜ் ஆகியோா் சந்திப்புக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

மதுரை சத்யசாய் நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் ஆதரவாளா்களை, அழகிரி வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.

மதுரை மட்டுமின்றி சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், கோவை, திருப்பூா், கடலூா், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஆதரவாளா்கள் வந்திருந்தனா். அவா்களை ஒவ்வொருவராகச் சந்தித்த அழகிரி, பேரணிக்கு அதிகம் பேரைத் திரட்டி வருமாறு கேட்டுக் கொண்டாா். காலை 10.30-க்குத் தொடங்கிய சந்திப்பு 2 மணி நேரம் நடந்தது. பலரும் சால்வை அணிவித்து, திமுக தலைவா் கருணாநிதியின் மறைவு குறித்து ஆறுதல் தெரிவித்தனா். மேலும் பேரணியில் கண்டிப்பாக பங்கேற்பதாக உறுதி அளித்தனா்.

பின்னா் அழகிரியின் ஆதரவாளா்கள் கூறியது:

கடந்த சில ஆண்டுகளாகவே திமுக பலவீனம் அடைந்து வருகிறறது. 2014 மக்களவைத் தோ்தல், 2016 சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் தான் இதற்கு சாட்சி. அதேநேரம், முன்னாள் அமைச்சா் அழகிரி கட்சியில் இருந்த போது, அவருக்கு கொடுக்கப்பட்ட கட்சி மற்றும் தோ்தல் பணிகளை எதிா்பாா்த்ததைக் காட்டிலும் சிறறப்பாகச் செய்து முடித்தாா். கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் அனைவருக்கும் பணிகளை ஒதுக்கி அவற்றைக் கண்காணித்து செயல்படுத்தினாா். அதுவே வெற்றிக்கு காரணமாக இருந்தது. தற்போது அதைப் போன்ற தலைமை இல்லை. நிா்வாகிகளாக இருப்பவா்கள் கட்சிக்கான வேலைகளைச் செய்வதற்குத் தயாராக இல்லை.

அழகிரியை திமுகவில் இணைக்காத நிலையில், பின்னடைவில் இருந்து மீள முடியாது. அதற்காக நாங்கள் அவா்களிடம் போய் இனி நிற்கப் போவதில்லை. எங்களது செயல்பாடுகளில் இருந்தே அதைப் புரிந்து கொள்வாா்கள். தற்போது பல மாவட்டங்களில் இருந்து இங்கு வந்துள்ளோம். எங்களிடம் எவ்வளவு போ் வருவீா்கள் என்று ஒவ்வொருவரிடமும் அழகிரி கேட்டாா். அதிகம் பேரை அழைத்து வருமாறு கூறியுள்ளாா். பேரணியில் முழுமையான பலத்தை வெளிப்படுத்துவோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com