மக்களவைத் தேர்தல்: அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் ஆலோசனை

மக்களவை மற்றும் பேரவை இடைத் தேர்தல் தொடர்பாக அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் கட்சித் தலைமை
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.


மக்களவை மற்றும் பேரவை இடைத் தேர்தல் தொடர்பாக அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் கட்சித் தலைமை செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்தின் போது, பெரம்பூர் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் கட்சிப் பணிகளை மேற்கொள்ள 14 பேருக்கு இலவச ஆட்டோக்கள் அளிக்கப்பட்டன.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இந்தக் கூட்டத்தில், மக்களவை, சட்டப் பேரவை இடைத் தேர்தல் ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வாக்குச்சாவடி முகவர்கள்: அதிமுக சார்பில் வாக்குச் சாவடி முகவர்களை நியமிக்க மாவட்டச் செயலாளர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான கடிதமும் இந்தக் கூட்டத்தில் அளிக்கப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நடந்த இந்தக் கூட்டத்தில் தேர்தல் பணிகளுடன், அதிமுக செயற்குழு-பொதுக் குழுக் கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com