தமிழகத்திலும் வெற்றிக்கொடி பறக்கும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

பாஜக-வும், அதிமுக அரசும் வீழ்த்தப்பட்டு இந்திய அளவிலும், தமிழகத்திலும் வெற்றிக்கொடி விரைவில் பறக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலும் வெற்றிக்கொடி பறக்கும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்


பாஜக-வும், அதிமுக அரசும் வீழ்த்தப்பட்டு இந்திய அளவிலும், தமிழகத்திலும் வெற்றிக்கொடி விரைவில் பறக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு மடல் என்ற வடிவில் அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் சிதைக்கின்ற வகையில் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவை வீழ்த்தி, மதநல்லிணக்கமும் மாநில உரிமைகளும், மக்கள் ஜனநாயகமும் காப்பாற்றப்படுகின்ற வகையில் ஒரு புதிய மெகா கூட்டணி தலைநகர் தில்லியில் உருவாகியுள்ள நிலையில், அதற்கடுத்த நாளே அந்தக் கூட்டணியின் அடிப்படை நோக்கத்தை நாடெங்கும் வெற்றிச் செய்தியாக அறிவித்திடும் வகையில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில தேர்தல் முடிவுகள் அமைந்தன.
தேசிய அளவில் மாற்று சக்தியை ஒருங்கிணைப்பதில் எப்போதும் முன் நிற்கும் திமுக, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்திலும் தனது பங்களிப்பை நிறைவேற்றியது. அனைத்துத் தலைவர்களின் மனதிலும் மத்திய பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் இருப்பதை தில்லி பயணத்தில் முழுமையாக உணர்ந்திட முடிந்தது. அதே எண்ணம்தான் இந்திய மக்களின் மனதிலும் இருக்கிறது என்பதை டிசம்பர் 11-ஆம் நாள் வெளியான தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. 
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களிலும் பாஜக வீழ்த்தப்பட்டுள்ளது. இது தொடக்க வெற்றி. இனியும் தொடரும் இந்த வெற்றி. இந்திய அளவிலும் தமிழகத்திலும் பாஜக-வும் அதன் ஆதரவில் நடைபெறும் அதிமுக அரசும் வீழ்த்தப்படுவது நிச்சயம். 
ஜனநாயக போர்க்களமான தேர்தல் களத்தில் வெற்றி பெற்று தமிழகத்தின் வெற்றிக் கொடியாக திமுக வெற்றிக் கொடி பட்டொளிவீசிப் பறக்கும். அதற்கு முன்னோட்டமாகத்தான், கட்சி தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தின் வாயிலில், நாட்டிலேயே மிக உயர்ந்து நிற்கும் வகையில், 114 அடி உயரமும் 2430 கிலோ எடையும் கொண்ட கொடிக்கம்பத்தில் இருபதுக்கு முப்பது அடி என்ற பிரமாண்ட அளவிலான திமுக கொடி ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.
விரைவில் வெற்றிக் கொடி பறக்கும் இந்திய அளவிலும், தமிழகத்திலும் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com