ரஜினிகாந்த் 68-வது பிறந்தநாள்: தலைவர்கள், நடிகர்கள் வாழ்த்து

தனது 68-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர்களும்
ரஜினிகாந்த் 68-வது பிறந்தநாள்: தலைவர்கள், நடிகர்கள் வாழ்த்து


தனது 68-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர்களும் தங்களுடைய சுட்டுரை பக்கத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
மு.க.ஸ்டாலின் (திமுக): திரையுலக சூப்பர் ஸ்டாரும், அருமை நண்பருமான ரஜினிகாந்த்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன், நலமுடன்.
சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): மனிதநேயர், பண்பாளர், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எனது ஆருயிர் நண்பர் ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மேலும் பல்லாண்டுகள் வாழ்க வாழ்க.
தமிழிசை (பாஜக): சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க வாழ்க பல்லாண்டு நலமுடன் என என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொன்.ராதாகிருஷ்ணன் (மத்திய இணையமைச்சர்): பிறந்தநாளைக் கொண்டாடும் நண்பர் ரஜினிகாந்த்துக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துகள். அவரது நீடித்த ஆயுள், ஆரோக்கியத்துக்கு எல்லாம் வல்ல அன்னை சக்தியைப் பிரார்த்திக்கின்றேன்.
நடிகர் கமல்ஹாசன்: என் பல ஆண்டுகால நண்பர், சக மாணவர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்.
நடிகர் அமிதாப் பச்சன்: நண்பர், சக ஊழியர், உணர்ச்சிப்பூர்வமானவர், பிறந்தநாள் வாழ்த்துகள் ரஜினி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com