கோவை தேக்கம்பட்டி வனப்பகுதியில் யானைகள் புத்துணர்வு முகாம் தொடங்கியது

கோவை தேக்கம்பட்டி வனப்பகுதியில் யானைகள் புத்துணர்வு முகாம் இன்று தொடங்கி உள்ளது. 
கோவை தேக்கம்பட்டி வனப்பகுதியில் யானைகள் புத்துணர்வு முகாம் தொடங்கியது

கோவை தேக்கம்பட்டி வனப்பகுதியில் யானைகள் புத்துணர்வு முகாம் இன்று தொடங்கி உள்ளது. 

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட  வன பத்ரகாளியம்மன் கோயில் அருகே பவானி ஆற்றங்கரையோரத்தில் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு  முகாம் 2012 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.  இந்த ஆண்டுக்கான 6 ஆவது புத்துணர்வு முகாம் தேக்கம்பட்டியில் இன்று தொடங்கி உள்ளது. 

இதனை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். அப்போது அவர்களை யானைகளுக்கு கரும்புகள், பழங்கள் வழங்கினர். ஜனவரி 30 ஆம் தேதி வரை 48 நாள்கள் நடைபெற உள்ள இந்த முகாமில் தமிழகத்திலுள்ள 29 கோயில் யானைகள் பங்கேற்க உள்ளன. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com