ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: இன்று புயலாக மாறுகிறது

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: இன்று புயலாக மாறுகிறது

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து, சனிக்கிழமை புயலாகிறது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து, சனிக்கிழமை புயலாகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து தீவிர புயலாகி, ஓங்கோல்-காக்கிநாடா இடையே வரும் 17-ஆம் தேதி கரையைக் கடக்க உள்ளது. 
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் வெள்ளிக்கிழமை கூறியது: 
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வியாழக்கிழமை நிலவிவந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இது வெள்ளிக்கிழமை சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 930 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்கு  தென்கிழக்கே சுமார் 1,090 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தற்போது மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில்  நகர்கிறது.  சனிக்கிழமை புயலாக வலுப்பெறும். அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது. 
இந்தப் புயல் வரும் 17-ஆம் தேதி பிற்பகலில் ஆந்திர கடற்கரைப் பகுதியில் ஓங்கோல்-காக்கிநாடாவுக்கு இடையே கரையைக் கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வடதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில்  சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மழை பெய்யக் கூடும்.  
55 கி.மீ. வேகத்தில் காற்று: தரைக் காற்று, மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். தென், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்  மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com