வங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'பெய்ட்டி' புயலாக மாறியது

வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'பெய்ட்டி' புயலாக மாறி உள்ளது. இந்த புயலால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஓரிரு
வங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'பெய்ட்டி' புயலாக மாறியது


வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'பெய்ட்டி' புயலாக மாறி உள்ளது. இந்த புயலால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும், மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது: தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஆந்திர மாநிவலம் மசூலிப்பட்டினத்தை நோக்கி நகரத் தொடங்கியது.

இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு நாடுகள் வரிசைப்படி தாய்லாந்து 'பெய்ட்டி' என பெயரிடப்பட்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என எச்சரித்துள்ளது. 

சென்னையில் இருந்து 590 கிலோ மீட்டர் தொலைவில் ஆந்திராவை நோக்கி மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் பெய்ட்டி புயல், நாளை மறுநாள் திங்கள்கிழமை (டிச.17) ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் - காக்கிநாடா இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வடக்கு கடற்கரைக்கு 200 கிலோ மீட்டர் தூரம் வரை புயல் வரும் என்றும் அப்போது மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். இதன் காரணமாக வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் மிதமான மற்றும் கனமழை பெய்யும் எனவும் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆந்திர கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த புயலால் கோதாவரி, விசாகப்பட்டினம், கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஏனம் மாவட்டமும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 

புயல் சின்னம் நெருங்குவதால் தமிழகத்தின் துறைமுகங்களில் புயல் எச்சரிகை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. புயல் தொடர்பான புகார்களை 1077 என்ற கட்டணமில்லை எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழக கடலோரப் பகுதிகளான திருவொற்றியூர், எண்ணூர், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com