பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து குறைந்து வந்தது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையில் கடந்த சில தினங்களாக குறைந்தும், அதிகரித்தும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து சனிக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் விலை மாற்றமில்லாமலும், டீசல் விலை 13 காசுகள் குறைந்தும் விற்பனையாகிறது.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 72.99 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ. 67.97 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.