80 டிபன் பாக்ஸ்களில் மறைத்து வைத்து மலேசியாவுக்கு கடத்திச் செல்லவிருந்த 11 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

திருச்சி விமானநிலையத்தில் இருந்து மலேசியா செல்லும் விமானத்தில் கடத்திச்செல்ல முயன்ற 11 கிலோ போதைப் பொருளை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (சென்னை) போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிபன் பாக்ஸ்களுடன் கைது செய்யப்பட்ட எஸ். அஜ்மீர் நாகூர்கான்.
டிபன் பாக்ஸ்களுடன் கைது செய்யப்பட்ட எஸ். அஜ்மீர் நாகூர்கான்.

திருச்சி விமானநிலையத்தில் இருந்து மலேசியா செல்லும் விமானத்தில் கடத்திச்செல்ல முயன்ற 11 கிலோ போதைப் பொருளை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (சென்னை) போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியிலிருந்து கோலாலம்பூருக்கு செவ்வாய்க்கிழமை இரவு செல்லவிருந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்திச் செல்லப்படுவதாக சென்னையில் உள்ள மத்திய அரசின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சென்னையிலிருந்து சிறப்புப் படையினர் திருச்சிக்கு வந்து கோலாலம்பூர் செல்லும் பயணிகளின் அனைத்து உடமைகளையும் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை சோதனையிட்டனர். அப்போது, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். அஜீம் நாகூர்கான் (24) என்பவர் கொண்டுவந்த சரக்கு பண்டலை பிரித்து பரிசோதனை செய்தனர்.
பெரிய அட்டைப்பெட்டி ஒன்றில் குழந்தைகள், பெரியவர்கள் பயன்படுத்தும் மதிய உணவு கொண்டு செல்வதற்காக 2 அடுக்கு சில்வர் டிபன் பாக்ஸ்கள் இருந்தன. 
மொத்தம் 80 எண்ணிக்கையில் பிளாஸ்டிக் கவர் செய்து அதன் மீது சிறிய ரக அட்டைப்பெட்டி செய்து புதிதாக விற்பனைக்கு செல்லும் டிபன் பாக்ஸ்களை போன்று பார்சல் செய்யப்பட்டிருந்தது. 
இதில், சந்தேகமடைந்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் 80 டிபன் பாக்ஸைகளையும் தனித்தனியே பிரித்து சோதனையிட்டதில் அதனுள்ள சூடோஎபிடிரைன் என்ற போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. ஒவ்வொரு டிபன் பாக்ஸிலும் சரசாரியாக 120 கிராம் என்ற அளவில் மறைத்து 11 கிலோ எடையில் போதைப் பொருள் கடத்திச் செல்ல இருந்தது தெரியவந்தது. 
உடனடியாக அவற்றை பறிமுதல்செய்த போலீஸார், அஜீம் நாகூர் கானை கைது செய்தனர். 
மேலும், போதைப்பொருள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, யாருக்குகொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. கடந்தாண்டு இதேபோல 5 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்மதிப்பு ரூ.4 லட்சமாக இருந்தது. இப்போது பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளின் வகை, அதன் மதிப்பு குறித்து கணக்கிடப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com