பொறியியல் கல்லூரி அனுமதி நீட்டிப்பு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள் அனுமதி நீட்டிப்புக்காக, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள் அனுமதி நீட்டிப்புக்காக, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 5-ஆம் தேதி வரை பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
நாடு முழுவதும் உள்ள பொறியியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் ஏஐசிடிஇ-யிடம் ஒவ்வொரு ஆண்டும் அனுமதி பெறுவது அவசியம். அதன் பிறகே, அந்தக் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை அந்த கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள முடியும். 2018-19 கல்வியாண்டுக்கான அனுமதி, அனுமதி நீட்டிப்புப் பணிகளை ஏஐசிடிஇ தொடங்கியுள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள பொறியியல், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களிடமிருந்து கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை ஏஐசிடிஇ பெற்றது.
விண்ணப்பிக்க ஜனவரி 31 கடைசி நாள் எனவும், அபராதத் தொகையுடன் பிப்ரவரி 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் ஏஐசிடிஇ முன்னர் அறிவித்திருந்தது. இந்நிலையில், கல்லூரிகள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஏஐசிடிஇ மேலும் நீட்டிப்பு செய்துள்ளது. அதன்படி, அனுமதி நீட்டிப்புக்கான விண்ணப்பத்தை கல்லூரிகள் அபராதத் தொகை இன்றி வரும் 5-ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். கடைசி தேதிக்குப் பிறகும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இயலாத ஏற்கெனவே இயங்கி வரும் கல்வி நிறுவனங்கள் மட்டும், அபராதத் தொகையுடன் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com