ரூ.1,000 கட்டண பஸ் பாஸ்: அடையாள அட்டையுடன் பயண அட்டை விநியோகம்

முறைகேட்டை தடுக்க தனி அடையாள அட்டையுடன் புதிய ரூ.1,000 கட்டண பஸ் பாஸ் விநியோகம் புதன்கிழமை சென்னையில் உள்ள 42 பேருந்து நிலையங்களில் தொடங்கியது. 

முறைகேட்டை தடுக்க தனி அடையாள அட்டையுடன் புதிய ரூ.1,000 கட்டண பஸ் பாஸ் விநியோகம் புதன்கிழமை சென்னையில் உள்ள 42 பேருந்து நிலையங்களில் தொடங்கியது. 
சென்னையில் மாநகரப் பேருந்துகளில் பல லட்சம் பயணிகள் நாள்தோறும் பயணிக்கின்றனர். கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் பேருந்துப் பயணத்தை முடிந்தளவு குறைத்தனர். இதனால் பேருந்துக் கட்டண உயர்வுக்கு தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டதை தொடர்ந்து ஒரு ரூபாய் குறைக்கப்பட்டது
இந்நிலையில் பேருந்துக் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தவுடன் ஒருநாள் பயணம் செய்யக்கூடிய ரூ.50 பஸ் பாஸ் நிறுத்தப்பட்டது. விருப்பம்போல் மாதந்தோறும் பயணம் செய்யும் ரூ.1000 பஸ் பாஸ் தொடர்ந்து பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டது. இதுதவிர அலுவலகங்களுக்கு செல்லக் கூடியவர்கள் பயன்படுத்தும் மாதாந்திர பஸ் பாஸ் விநியோகமும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் ரூ.1,000 கட்டணம் செலுத்தும் பஸ் பாஸ் தொடரும் என்றும், மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் மட்டும் உயர்த்தப்படும் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். ரூ.240 விலையில் வழங்கப்பட்ட மாதாந்திர சலுகை பயண அட்டையின் விலை ரூ.320 ஆகவும், ரூ.280 விலையில் வழங்கப்படும் மாதாந்திர பயண அட்டை ரூ.370 ஆகவும் உயர்த்தப்பட்டு புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது. சென்னையில் பாரிமுனை, கோயம்பேடு, தாம்பரம், மந்தைவெளி, அடையாறு, திருவான்மியூர், பெரம்பூர், வடபழனி, பூந்தமல்லி, கிண்டி உள்ளிட்ட 42 பஸ் நிலையங்களில் புதன்கிழமை முதல் பஸ் பாஸ் விநியோகம் தொடங்கியது.
அடையாள அட்டையுடன் பஸ் பாஸ்: புதிதாக வழங்கப்படும் ரூ.1,000 கட்டணச் சலுகை பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டைகளில் எவ்வித முறைகேட்டுக்கும் வழி வகுக்காமல் இருப்பதற்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தனி அடையாள அட்டையுடன் கூடிய புதிய பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இந்த நடைமுறையில் பஸ் பாஸýடன் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் வழங்கப்படும் தனி அடையாள அட்டையை பயணிகள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் சலுகைக் கட்டண பயண அட்டையை வேறு யாரும் பயன்படுத்துவதைத் தடுக்க முடியும் என்றனர் அதிகாரிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com