60 ஆண்டுகளுக்கு பின் முருகப்பெருமான் வீதியுலா

பட்டாபிராமபுரம் கிராமத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு உற்சவர் முருகப்பெருமான் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

பட்டாபிராமபுரம் கிராமத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு உற்சவர் முருகப்பெருமான் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
திருத்தணி மலைக்கோயிலில் இருந்து உற்சவர் முருகப்பெருமான், ஆண்டுதோறும் தை மாதத்தில் குமாரகுப்பம், அகூர், தரணிவராகபுரம், மேல்திருத்தணி மற்றும் திருத்தணி ஆகிய பகுதிகளில் தனித்தனியாக ஒரு நாள் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். வழக்கம் போல் இந்த ஆண்டும், மேற்கண்ட ஊர்களில் உற்சவர் கடந்த சில வாரங்களுக்கு முன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில் பட்டாபிராமபுரம் கிராமத்திற்கு 60 ஆண்டுகளுக்குப் பிறகு, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வியாழக்கிழமை காலை வந்தார். தொடர்ந்து, மாலை 6 மணிக்கு அங்குள்ள குளக்கரையில் உள்ள சீரமைக்கப்பட்ட மண்டபத்தில் உற்சவர் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து உற்சவர் முருகப்பெருமான் கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி கிராமம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com