எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளவர்களை விடுவிக்கும்போது ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். 
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகிய நால்வரையும் விடுதலை செய்ய தமிழக உள்துறைச் செயலருக்கு வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 
இந்த 7 பேரும் தமிழக சிறைகளில் நீண்டகாலமாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். நன்னடத்தை அடிப்படையிலும் முன்னணியில் இருப்பது இவர்கள்தான். இத்தகையவர்கள் விடுதலை செய்யப்படுவதன் மூலம் அவர்கள் சமூகத்துக்காக உழைக்கவும், 27 ஆண்டுகளாக நிறைவேற்றத் தவறிய குடும்பக் கடமைகளை நிறைவேற்றவும் வாய்ப்புக் கிடைக்கும். 
மத்திய புலனாய்வு அமைப்புகளால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதா, மாநில அரசுக்கு உள்ளதா என்பது குறித்த சர்ச்சைகளும், நடைமுறைகளும் அவர்களின் விடுதலைக்கு எந்த வகையிலும் தடையாக இருக்கக் கூடாது. அதற்கேற்ற வகையில் அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து 7 தமிழர்களையும் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com