'கோடை காலத்தில் சுற்றுலாத் தலங்கள், கோயில்களுக்கு சிறப்புப் பேருந்துகள்'

கோடை காலத்தில் சுற்றுலாத் தலங்கள் மற்றும் கோயில்களுக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளதாக தமிழக அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறினர்.
'கோடை காலத்தில் சுற்றுலாத் தலங்கள், கோயில்களுக்கு சிறப்புப் பேருந்துகள்'

கோடை காலத்தில் சுற்றுலாத் தலங்கள் மற்றும் கோயில்களுக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளதாக தமிழக அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறினர்.
இது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியது: அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வு பிரச்னை இருந்தாலும் சிறப்பான சேவையை வழங்கி பயணிகளை மீண்டும் தக்கவைத்துக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய பேருந்துகளை வாங்குவதற்கான பணி தீவிரமடைந்துள்ளது.
அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள், அதிநவீன சொகுசுப் பேருந்துகளும் இடம் பெறுகின்றன. மக்களுக்கு தரமான சேவை கிடைக்கும் பட்சத்தில், அரசுப் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் மீண்டும் அதிகரிக்கும். 
கோடை விடுமுறை வரவுள்ளதால் அதையொட்டி சுற்றுலாத் தலங்கள், கோயில் நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். குறிப்பாக கோடை விடுமுறை நாட்களில் வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாகச் செல்லும் என எதிர்பார்க்கிறோம். எனவே அந்த சமயத்தில் 300 முதல் 400 சிறப்புப் பேருந்துகளை இயக்குவோம். 
இதனால் நிகழாண்டில், கோடை விடு முறையை முன்னிட்டு சென்னையில் இருந்து 400 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகங்கள் முடிவு செய்துள்ளன. தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகள் ஏப்ரல் 3-வது வாரத்தில் முடிவடைந்து கோடை விடுமுறை அளிக்கப் படும். விடுமுறை நாட்களில் கடற்கரைப் பகுதிகள், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். எனவே, மக்களின் தேவைக்கு ஏற்றவாறு, சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகங்கள் முடிவு செய்துள்ளன. இந்த ஆண்டில் எந்தெந்த சுற்றுலா மையங்கள் மற்றும் மாவட்டப் பகுதிகளுக்கு கூடுதலாகப் பேருந்துகளை இயக்குவது என்பது தொடர்பாக விரைவில் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூட்டம் நடக்கவுள்ளது. மேலும் நீண்ட தூரத்துக்கு பயணம் செய்யும் பயணிகள் போக்குவரத்துத் துறை இணையதளமான(www.tnstc.in)  முன்பதிவு செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com