சேலம் ஆனைமடுவு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவு

ஆனைமடுவு நீர்த்தேக்கத்திலிருந்து வரும் 21ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் ஆனைமடுவு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவு

ஆனைமடுவு நீர்த்தேக்கத்திலிருந்து வரும் 21ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், புழுதிக்குட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஆனைமடுவு நீர்த்தேக்கத்திலிருந்து ஆற்றுப் பாசன மற்றும் கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன. 

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், புழுதிக்குட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஆனைமடுவு நீர்த்தேக்கத்திலிருந்து அணையின் தலைமை மதகின் மூலம் ஆற்றுப் பாசனப் பகுதிகளுக்கு 15.2.2018 காலை 8.00 மணி முதல் 21.2.2018 காலை 8.00 மணி வரை ஒரு நாளைக்கு வினாடிக்கு 60 க.அடி வீதம் (5.18 மி.க.அடி) 6 நாட்களுக்கு 31.08 மி.க.அடிக்கு மிகாமலும், 21.2.2018 அன்று காலை 8.00 மணி முதல் அணையின் தலைமை மதகின் மூலம் வலதுபுறக் கால்வாய் பகுதிக்கு தினசரி வினாடிக்கு 35 க.அடி வீதம் (3.02 மி.க.அடி) மற்றும் இடதுபுறக் கால்வாய் பகுதிக்கு தினசரி வினாடிக்கு 15 க.அடி வீதம் (1.30 மி.க.அடி) ஆக மொத்தம் கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு தினசரி வினாடிக்கு 50 க.அடி வீதம் (4.32 மி.க.அடி) 6 நாட்களுக்கு சுழற்சி முறையில் மொத்தம் 25.92 மி.க.அடிக்கு மிகாமலும் சிறப்பு நனைப்புக்காக தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்..

மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com