பரம்பிக்குளம் - ஆழியாறு விவகாரம்: தமிழக முதல்வருக்கு பினராயி விஜயன் கடிதம்

தமிழகம் மற்றும் கேரளம் இடையேயான பரம்பிக்குளம் - ஆழியாறு நீர்ப்பகிர்வு விவகாரத்தில் விரைந்து தீர்வு காண்பதற்காக, இரு மாநில முதல்வர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்
பரம்பிக்குளம் - ஆழியாறு விவகாரம்: தமிழக முதல்வருக்கு பினராயி விஜயன் கடிதம்

தமிழகம் மற்றும் கேரளம் இடையேயான பரம்பிக்குளம் - ஆழியாறு நீர்ப்பகிர்வு விவகாரத்தில் விரைந்து தீர்வு காண்பதற்காக, இரு மாநில முதல்வர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவர் செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
பரம்பிக்குளம் - ஆழியாறு நீர்ப்பகிர்வு உடன்படிக்கையின்படி, கேரளத்துக்கு பிப்.15-ஆம் தேதி வரை வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால், பிப்.11 மற்றும் 12 நிலவரப்படி, வினாடிக்கு 80 கனஅடி வீதமே தண்ணீர் கிடைக்கப் பெற்றுள்ளது.
பாலக்காடு மாவட்டத்தின் சித்தூர் பகுதி விவசாயிகள், பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டத்திலிருந்து கிடைக்கும் நீரையே பெரிதும் நம்பியுள்ளனர். சித்தூர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையும் நிலவுகிறது. வறட்சியால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பரம்பிக்குளம் - ஆழியாறு நீர்ப்பகிர்வு திட்ட உடன்படிக்கையின்படி தமிழகம் தண்ணீர் வழங்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் விரைந்து தீர்வு காண்பதற்காக இரு மாநில முதல்வர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அதற்காக நேரம் ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தனது கடிதத்தில் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக முதல்வருக்கு கடந்த 8-ஆம் தேதியும் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார்.
முன்னதாக, பரம்பிக்குளம் - ஆழியாறு திட்ட உடன்படிக்கையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் கடந்த மாதம் வலியுறுத்தியிருந்தார்.
'பரம்பிக்குளம் - ஆழியார் நீர்ப் பகிர்வு உடன்படிக்கை ஏறத்தாழ 30 ஆண்டு காலம் பழமையானது. எனவே, அதனை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. இதுகுறித்து தமிழகத்துடன் பல்வேறு தருணங்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. பரம்பிக்குளம் - ஆழியாறில் இருந்து அதிக அளவு நீரைப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கேரள அரசு முன்னெடுக்கும்' என்று பினராயி விஜயன் கூறியிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com