பெரம்பலூரில் ஏப். 10 முதல் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கான ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் பெரம்பலூர் ஆட்சியரக விளையாட்டு மைதானத்தில் ஏப். 10 முதல் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் குறித்து பேசுகிறார் திருச்சி மண்டல இயக்குநர் கர்னல் ரஜனீஷ் லால். உடன், மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா உள்ளிட்டோர். 
ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் குறித்து பேசுகிறார் திருச்சி மண்டல இயக்குநர் கர்னல் ரஜனீஷ் லால். உடன், மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா உள்ளிட்டோர். 

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கான ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் பெரம்பலூர் ஆட்சியரக விளையாட்டு மைதானத்தில் ஏப். 10 முதல் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
இதுகுறித்து ஆட்சியரகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை அவர் மேலும் கூறியது:
திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், கரூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி , ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், காரைக்கால் ஆகிய 15 மாவட்ட இளைஞர்களுக்கான ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் ஏப். 10 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 
முகாமுக்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும் என்றார். 
தொடர்ந்து திருச்சி மண்டல இயக்குநர் கர்னல் ரஜனீஷ் லால் கூறியது:
முகாமில் சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் டெக்னிக்கல் (அம்யூனிசன் மற்றும் ஏவியேசன்), சோல்ஜர் நர்சிங் அசிஸ்டண்ட், சோல்ஜர் ஜெனரல் டியூட்டி, சோல்ஜர் கிளர்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், சோல்ஜர் டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு நடைபெற உள்ளது. பிப். 24 முதல் மார்ச் 25 வரை www.joinindianarmy.nic.in  என்னும் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
முகாமில் பங்கேற்போர் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு மதிப்பெண் பட்டியல், குடியுரிமைச் சான்று, சாதிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ்களின் அசல், நகல்களைக் கொண்டுவர வேண்டும். இறுதியாக படித்த கல்வி நிறுவனத்தில் வழங்கப்பட்ட படிப்பு மற்றும் நன்னடத்தைச் சான்றிதழ் (6 மாதத்துக்குள் பெற்றது), பள்ளி மாற்றுச் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். என்.சி.சி, விளையாட்டு, கணினி படிப்பு உள்ளிட்ட இதர கூடுதல் சான்றிதழ்கள் இருந்தாலும் கொண்டு வரலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com