பேச்சுவார்த்தை தோல்வி: எல்பிஜி லாரிகள் வேலைநிறுத்தம் தொடரும்

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் புதன்கிழமையும் 3-ஆவது நாளாக நீடித்தது. மும்பையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில்
பேச்சுவார்த்தை தோல்வி: எல்பிஜி லாரிகள் வேலைநிறுத்தம் தொடரும்

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் புதன்கிழமையும் 3-ஆவது நாளாக நீடித்தது. மும்பையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், வேலைநிறுத்தம் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. 
தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கேஸ் டேங்கர் லாரிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்ய மாநில அளவில் டெண்டர் நடத்த எதிர்ப்புத் தெரிவித்தும், மீண்டும் பழைய முறைப்படி மண்டலம் வாரியாக டெண்டர் நடத்த வலியுறுத்தியும், கடந்த 12-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் புதன்கிழமையும் 3-ஆவது நாளாக நீடித்தது. 
இந்தப் போராட்டம் காரணமாக, தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 4,200 கேஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் தினமும் 18,000 டன் கேஸ் வீதம் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டரில் எரிவாயு நிரப்பும் மையங்களுக்கு (பாட்லிங் பிளாண்ட்) கொண்டு செல்வது தடைப்பட்டு வருகிறது. இதனால் பாட்லிங் பிளாண்ட்டுகளில் ஓரிரு நாள்களில் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில், புதன்கிழமை மாலை மும்பையில் எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 
மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை இரவு 9.30 மணி வரை தொடர்ந்து நீடித்தது. இதில் மாநிலம் வாரியான டெண்டர் என்ற அரசின் கொள்கை முடிவில் மாற்றம் செய்ய முடியாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், மாநில அளவில் டெண்டரில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க சில ஆலோசனைகளை அதிகாரிகள் தெரிவித்தனர். 
இதுகுறித்து வியாழக்கிழமை நாமக்கல்லில் சங்க பொதுக் குழுவை கூட்டி, அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தென்மண்டல பல்க் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com