வேலைவாய்ப்புக்காக 79 லட்சம் பேர் பதிவு

தமிழகத்தில் வேலைவாய்ப்புக்காக 79, 78,429 பேர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பதாக, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில் கூறினார். 
வேலைவாய்ப்புக்காக 79 லட்சம் பேர் பதிவு

தமிழகத்தில் வேலைவாய்ப்புக்காக 79, 78,429 பேர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பதாக, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில் கூறினார். 
மதுரை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்புத் துறை ஆகியவை இணைந்து, திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தின.
இதில், அமைச்சர் நிலோபர் கபில் பேசியது: 
தமிழகம் முழுவதும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 79 லட்சத்து 78 ஆயிரத்து 429 பேர் வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்திருக்கின்றனர். இதில், 20.69 லட்சம் பேர் 18 வயதுக்குள்பட்டவர்கள். 18 முதல் 23 வயதுக்கு உள்பட்டவர்கள் 17 ,09,845 பேர். 24 முதல் 35 வயதுக்கு உள்பட்டவர்கள் 30,46,619 பேர். மேலும், 36 - 56 வயது உடையவர்கள் 11.46 லட்சம் பேரும், 57 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5, 730 பேரும் உள்ளனர்.
படிப்பை முடிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்கு அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பல்வேறு போட்டித் தேர்வுகள் மூலமாக அரசுப் பணிகளில் அவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை, வேலைவாய்ப்புத் திறனைப் பெறுவதற்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது. இதுதவிர, மாவட்டந்தோறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்காக, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ்: மதுரை மாவட்டத்தில் இதுவரை 14 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.இவற்றில் 112 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 692 பேருக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளன. மேலும், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் 24 தனியார் நிறுவனங்களில் 782 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com