6 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள்: 19 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் 6 மாவட்டங்களின் ஆட்சியர்கள் உள்பட 19 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு
6 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள்: 19 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் 6 மாவட்டங்களின் ஆட்சியர்கள் உள்பட 19 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு:- (அடைப்புக்குறிக்குள் முன்பு வகித்த பதவி)

1. எஸ்.மலர்விழி தருமபுரி மாவட்ட ஆட்சியர் (சிவகங்கை மாவட்ட முன்னாள் ஆட்சியர்)
2. பிரசாந்த் மு.வடநேரே கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் (கடலூர் மாவட்ட ஆட்சியர்)
3. எம்.விஜயலட்சுமி அரியலூர் மாவட்ட ஆட்சியர் (பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர்-சுகாதாரம்)
4. வி.பி.தண்டபாணி கடலூர் மாவட்ட ஆட்சியர் (மீன்வளத் துறை இயக்குநர்)
5. மரியம் பல்லவி பல்தேவ் தேனி மாவட்ட ஆட்சியர் (வணிகவரிகள் துறை இணை ஆணையாளர்-அமலாக்கம்)
6. டி.அன்பழகன் கரூர் மாவட்ட ஆட்சியர் (ஆவண காப்பகங்கள் துறை இயக்குநர்)
7. ஜி.லட்சுமி பிரியா வணிகவரிகள் துறை இணை ஆணையாளர்-அமலாக்கம் (அரியலூர் மாவட்ட 
ஆட்சியர்)
8. என்.வெங்கடாசலம் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை இயக்குநர் (தேனி மாவட்ட ஆட்சியர்)
9. ஜி.கோவிந்தராஜ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை இணைச் செயலாளர் (கரூர் மாவட்ட ஆட்சியர்)
10. டி.விவேகானந்தன் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநர் (தருமபுரி மாவட்ட ஆட்சியர்)
11. ஆர்.பழனிசாமி தொழில்நுட்பக் கல்வி ஆணையாளர் (புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநர்)
12. சி.சமயமூர்த்தி போக்குவரத்துத் துறை 
ஆணையாளர் (ஏற்கெனவே வகித்து வந்த பொதுத்துறை சிறப்புச் செயலாளர்-மரபுகள் பிரிவை கூடுதல் பொறுப்பாக கவனிப்பார்)
13. என்.சுப்பையன் தோட்டக்கலைத் துறை இயக்குநர் (தாட்கோ நிர்வாக 
இயக்குநர்)
14. டி.மோகன் பொதுத்துறை துணைச் செயலாளர் (ஆளுநரின் முன்னாள் துணைச் செயலாளர்)
15. ஜெ.மேகநாதரெட்டி நில நிர்வாக ஆணையரக இணை ஆணையாளர் (மேட்டூர் சார்-ஆட்சியர்)
16. தயானந்த் கட்டாரியா மின் நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (போக்குரத்துத் துறை ஆணையாளர்)
17. கே.ஸ்ரீனிவாசன் மாநில தொழில் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் (ஏற்கெனவே வகித்து வந்த ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பார்.)
18. சஜ்ஜன்சிங் ஆர்.சவான் தாட்கோ நிறுவன நிர்வாக இயக்குநர் (கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்)
19. பி.மதுசூதன்ரெட்டி பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர்-சுகாதாரம் (நில நிர்வாக ஆணையரக இணை ஆணையாளர்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com