வாரிசு விவகாரம்: ஜெயலலிதாவின் ரத்த மாதிரி இருக்கிறதா? மருத்துவமனை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு விவகாரம் தொடர்பான வழக்கில், அப்பல்லோ மருத்துவமனை, ஜெயலலிதாவின் மரபணு, ரத்த உயிரி மாதிரிகளைப் பாதுகாத்து வைத்திருந்தால்
வாரிசு விவகாரம்: ஜெயலலிதாவின் ரத்த மாதிரி இருக்கிறதா? மருத்துவமனை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு விவகாரம் தொடர்பான வழக்கில், அப்பல்லோ மருத்துவமனை, ஜெயலலிதாவின் மரபணு, ரத்த உயிரி மாதிரிகளைப் பாதுகாத்து வைத்திருந்தால் அது தொடர்பாக பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர் நீதிமன்றத்தில் பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்பவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு என உரிமை கோரி வழக்குத் தொடர்ந்தார். ஜெயலலிதாவின் உடலைத் தோண்டியெடுத்து குல வழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்யவும், தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து தமிழக அரசு, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் அவரது சகோதரி தீபா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் தீபக் மற்றும் தீபா சார்பில் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே பதில்மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், 'இந்த வழக்குத் தொடர்பாக 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை உள்ள ஆவணங்களை பரிசீலித்து ஆய்வு செய்ய வேண்டி உள்ளதால், பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் தேவை' என்றார். அப்போது நீதிபதி, 'அரசு தரப்பில் தொடர்ந்து கால அவகாசம் கோருவதால், இந்த வழக்கில் தேவையில்லாமல் இடையீட்டு மனுக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது' என்றார். அப்போது அரசு தலைமை வழக்குரைஞர், 'முதலில் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பது குறித்து முடிவு செய்யாத நிலையில், இடையீட்டு மனுக்களை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை' என்றார். தீபா மற்றும் தீபக் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்களும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என வாதிட்டனர்.
அப்போது மனுதாரர் அம்ருதா சரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பிரகாஷ், 'அம்ருதா டிஎன்ஏ பரிசோதனை கோரியுள்ளார். எனவே ஜெயலலிதாவின் மரபணு, ரத்த உயிரி மாதிரிகள் அப்பல்லோ மருத்துவமனையில் பாதுகாப்பாக 
உள்ளதா என்பது தெரியவில்லை. எனவே இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட வேண்டும். மேலும் இந்த வழக்கில் பெங்களூருவைச் சேர்ந்த புகழேந்தியை இடையீட்டு மனுதாரராகச் சேர்க்கக் கூடாது' என வாதிட்டார். இதனையடுத்து நீதிபதி, 'வழக்கில் ஜெயலலிதாவின் ரத்த தொடர்புடைய உறவினர்கள் எதிர்மனுதாரர்களாக உள்ள நிலையில், ரத்த உறவு இல்லாதவர்களை எப்படி இடையீட்டு மனுதாரர்களாகச் சேர்க்க முடியும் என கேள்வி எழுப்பினார். இதனால் முதல்வர் பதவி வகித்த ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என கருத்து தெரிவித்தார். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் மரபணு ரத்த உயிரி மாதிரிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் பதிலளிக்க வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் மார்ச் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com