சேலம் - சென்னை இடையே பசுமை விரைவுச் சாலை அமைக்கப்படும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

சேலம்-சென்னை இடையே பசுமை விரைவுச் சாலை அமைக்கப்படும் என மத்திய சாலை, கப்பல் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
சேலம் - சென்னை இடையே பசுமை விரைவுச் சாலை அமைக்கப்படும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

சேலம்-சென்னை இடையே பசுமை விரைவுச் சாலை அமைக்கப்படும் என மத்திய சாலை, கப்பல் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
 சென்னை வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மத்திய-மாநில அரசுகளால் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். இக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 மத்திய அமைச்சர் நிதின் கட்கரி: ஆய்வுக் கூட்டத்துக்குப்பின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நிருபர்களிடம் கூறியது: சேலம்-சென்னை இடையே ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் பசுமை விரைவுச் சாலை அமைய உள்ளது. இந்த வழித்தடம் தொழில் வளர்ச்சிக்கு முக்கியமானது. இதன் மூலம் பயண நேரம் 6 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாகக் குறையும்.
 பசுமை வழித்தடம் அமைய முதல்வர் கடந்த ஆண்டு கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் 2 விரைவுச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான விவகாரத்தில் சட்டத்துக்குட்பட்டு உரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்றார்.
 முதல்வர் எடப்பாடி பழனிசாமி: தமிழகத்தில் பல்வேறு புதிய சாலைகள் திட்டங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இந்தப்பணிகள் மேற்கொண்ட மத்திய அரசுக்கு நன்றி. இந்தச் சாலைத் திட்டத்துக்காக நிலத்தை குறைந்த செலவில் கையகப்படுத்த முடியும். இப்பகுதியில் பெரும்பாலான நிலங்கள் தரிசாக உள்ளன. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் சென்னைக்கும் சேலத்துக்கும் இடையேயான தூரமும், எரிபொருளும் பெருமளவில் குறையும். எனவே, இந்தத் திட்டத்தை ஆய்வு செய்து, பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி திட்டத்தைச் செயல்படுத்தி தர வேண்டும்.
 தமிழகத்தில் உள்ள 22 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றித் தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சேலம், கோவை, மதுரை, நாகர்கோவிலில் "பஸ் போர்ட்' எனப்படும் மிகப் பெரிய பேருந்து நிலையங்கள்அமைக்கப்படும்.
 இரு மாநிலங்களின் தண்ணீர் தேவை குறித்து மத்திய அரசுக்குத் தெரியும். கர்நாடகமும், தமிழ்நாடும் இந்தியாவின் இரு கண்கள் போன்றவை.
 கோதாவரி ஆற்றின் தண்ணீரை வைகை அணை வரை கொண்டுவருவதுதான் மத்திய அரசின் திட்டம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் என்றார் முதல்வர் பழனிசாமி.
 தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை நிதின் கட்கரியிடம் முதல்வர் வழங்கினார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com