தச்சங்குறிச்சியில் நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு

கந்தர்வகோட்டை ஒன்றியம் தச்சங்குறிச்சி ஊராட்சியில் நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
தச்சங்குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரர்.
தச்சங்குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரர்.

கந்தர்வகோட்டை ஒன்றியம் தச்சங்குறிச்சி ஊராட்சியில் நிகழாண்டின் முதல் ஜல்லிக்கட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரியில் சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டு ஜல்லிக்கட்டுக்காக மாபெரும் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவசரச் சட்டம் இயற்றப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், இந்த அவசரச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 'பீட்டா' அமைப்பு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனால் வரும் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்படுமோ என்ற நிலை உருவானது. ஆனால், இந்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளதால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் , புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் தச்சங்குறிச்சி ஊராட்சியில், நடப்பாண்டின் முதல் ஜல்லிக்கட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். கந்தர்வகோட்டை எம்எல்ஏ நார்த்தாமலை பா. ஆறுமுகம், மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜல்லிக்கட்டுவில் மொத்தம் 650 காளைகள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு, சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். 
ஜல்லிக்கட்டில் சீறிவந்த காளைகள் முட்டி வீசியதில் 10-க்கும் மேற்பட்டவர்கள், காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சையளித்தனர். விழா ஏற்பாடுகளை தச்சங்குறிச்சி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com