பேரறிவாளனுக்கு மருத்துவமனையில் பரிசோதனை

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிறுநீரகம் தொடர்பான பரிசோதனைகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிறுநீரகம் தொடர்பான பரிசோதனைகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் சிறுநீரகத் தொற்று, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டு வந்தார்.
இதையடுத்து, அவரை உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனைக்கு வேலூர் அரசு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். 
இதையடுத்து வேலூர் மத்திய சிறையிலிருந்து சென்னை புழல் சிறைக்கு பேரறிவாளன் அண்மையில் மாற்றப்பட்டார். தொடர்ந்து கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் வியாழக்கிழமை காலை இரண்டாம் முறையாக அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரகத் தொற்று குறித்த பரிசோதனை, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. பரிசோதனைகளுக்குப் பிறகு அவர் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com