மேம்பாலங்கள், காவலர் குடியிருப்புகள்: முதல்வர் திறந்து வைத்தார்

காவலர் குடியிருப்புகள், காவல் நிலையங்கள், ஆற்று மேம்பாலங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில்
அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகளை வியாழிக்கிழமை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகளை வியாழிக்கிழமை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

காவலர் குடியிருப்புகள், காவல் நிலையங்கள், ஆற்று மேம்பாலங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் அரசு அலுவலர்களான குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், மேம்பாலங்கள், கட்டடங்களையும் திறந்து வைத்தார். 
அதன் விவரம்:
ஆய்வுமாளிகை திறப்பு: பொதுப்பணித்துறை சார்பில் சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் ரூ.75.69 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அரசு அலுவலர்களுக்கான ஏ மற்றும் பி வகை 200 குடியிருப்புகள் கட்டும் பணிக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் ஏலகிரி மலையில் பொதுப்பணித்துறையின் சார்பில் 61. 48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆய்வு மாளிகையையும் திறந்து வைத்தார்.
காவல்துறை குடியிருப்பு: உள்துறை சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் ரூ.7.76 கோடி மதிப்பீட்டில் ராஜபாளையம் 
தெற்கில் கட்டப்பட்டுள்ள 41 காவலர் குடியிருப்புகள், வெம்பக்கோட்டை காவல் நிலையம் மற்றும் ராஜபாளையத்தில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 11-ஆம் அணிக்கான ஆயுதக் கிடங்கு கட்டடம் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார். மேலும், ரூ.16.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 120 காவலர் குடியிருப்புகள், 4 காவல் நிலையங்கள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.
ரயில்வே மேம்பாலம்
மேலும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் திருப்பூர், சென்னை, சேலம், தருமபுரி, கோயம்புத்தூர், கரூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ரூ.69.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒரு ரயில்வே கீழ் பாலம், 9 ஆற்றுப்பாலங்கள் மற்றும் ஒரு வரையறுக்கப்பட்ட கீழ்பாலத்தினை பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார். 
உள்கட்டமைப்பு வசதிகள்: மதுரை மாவட்டம், வடபழஞ்சி கிராமத்தில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ரூ.14. 99 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து பொது உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ரூ.20.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். 
அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ராஜேந்திரபாலாஜி, செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், எம்.மணிகண்டன், தலைமைச் செயலாளர் ( கூடுதல் பொறுப்பு) க. சண்முகம் உள்பட முக்கிய அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com