தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து மோதி விபத்து: விருத்தாசலத்தில் ஒருவர் பலி! 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து மோதியதில். மொபெட்டில் சென்ற ஒருவர் பலியானார்.
தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து மோதி விபத்து: விருத்தாசலத்தில் ஒருவர் பலி! 

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து மோதியதில். மொபெட்டில் சென்ற ஒருவர் பலியானார்.

இதர அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை ஆகியவற்றை வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் கடந்த நான்கு நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக தற்காலிக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களைக் கொண்டு பேருந்துகளை அரசு இயக்கி வருகிறது. அந்த வகையில் விருத்தாசலம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையிலும் இரு பேருந்துகளை தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கி வந்துள்ளனர்.

இவ்வாறு இரு பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக விருத்தாசலம் பேருந்து நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தன. அப்பொழுது பின்னால் வந்த பேருந்து திடீரென தற்காலிக ஓட்டுநரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி முன்னால் சென்ற பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த அதிர்வின் காரணமாக முன்னால் சென்ற பேருந்து அதன் முன் சென்று கொண்டிருந்த மொபெட் மீது மோதியது.

இந்த விபத்தில் மொபெட்டை ஒட்டி வந்த சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்த சீயான்(37) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். மேலும் அவருடன் பயணித்த சாராத்சிட்டி மற்றும் சாமுவேல் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து காயம்பட்டவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்த சீயானின் உடல் பிரேத பரிசோதனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்தினைக் கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com