ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு வகை செய்ய சட்டத் திருத்தம்

அனைத்து மீனவர்களையும் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குத் தயார்படுத்திட, கடல் ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் உறுதி அளித்தார்.
ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு வகை செய்ய சட்டத் திருத்தம்

அனைத்து மீனவர்களையும் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குத் தயார்படுத்திட, கடல் ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் உறுதி அளித்தார்.
சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு நடைபெற்ற நேரமில்லாத நேரத்தில், தூத்துக்குடி மீனவர் பிரச்னை குறித்து, திமுக உறுப்பினர் கீதா பிரச்னை கேள்வி எழுப்பினார். தூத்துக்குடி விசைப் படகு மீனவர்கள் கடந்த நான்கு மாதங்களாக மீன்பிடி தொழிலுக்குச் செல்லாமல் இருப்பதாகத் தெரிவித்தார். இதற்கு, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பதில்:
தூத்துக்குடியில் 4 ஆயிரம் நாட்டுப் படகுகளும், 400 விசைப் படகுகளும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. அதில், 150 படகுகள் ஆழ்கடல் மீன்பிடிப்பை மேற்கொண்டு வருகின்றன. இந்தப் படகுகளைச் சார்ந்தவர்களே மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றனர். நாட்டுப் படகு மீனவர்களுக்கும், அவர்களுக்கும் இடையேயுள்ள பிரச்னையே இதற்குக் காரணம். இந்தப் பிரச்னை குறித்து, ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் 150 படகினைச் சேர்ந்த மீனவர்கள், உயர் 
நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். நீதிமன்றத்தில் உத்தரவு கிடைத்தபிறகு, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு எட்டப்படும்.
நமது மீனவர்களை ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தயார்படுத்திட வேண்டும். இதற்காக, அதிகசக்தி திறன் கொண்ட மோட்டார்களுடன் கூடிய படகுகளை இயக்க அனுமதிப்பது போன்ற அம்சங்களுக்காக கடல் ஒழுங்குமுறைச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்திட வேண்டும். எனவே, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அப்படிச் செய்தால், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com