பா.வளர்மதி, எழுத்தாளர் பாலகுமாரனுக்கு இலக்கிய விருதுகள்

தமிழக அரசின் 2017-2018-ஆம் ஆண்டிற்கான இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தந்தை பெரியார் விருது முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கும், திருவிக விருது எழுத்தாளர் பாலகுமாரனுக்கும்
பா.வளர்மதி, எழுத்தாளர் பாலகுமாரனுக்கு இலக்கிய விருதுகள்

தமிழக அரசின் 2017-2018-ஆம் ஆண்டிற்கான இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தந்தை பெரியார் விருது முன்னாள் அமைச்சர் பா. வளர்மதிக்கும், திருவிக விருது எழுத்தாளர் பாலகுமாரனுக்கும் வழங்கப்படவுள்ளது. 
தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சி, தமிழ்ச் சமுதாய உயர்வு ஆகியவற்றுக்குத் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள், தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்ளிட்ட 9 விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் பட்டியலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை (ஜன.12) வெளியிட்டுள்ளார். 
விருது பெறுவோர் பட்டியல்
1. திருவள்ளுவர் விருது (2018) - முனைவர் கோ.பெரியண்ணன், தலைவர், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்.
2. தந்தை பெரியார் விருது - பா.வளர்மதி, தலைவர், தமிழ்நாடு பாடநூல் கழகம்.
3. அண்ணல் அம்பேத்கர் விருது - டாக்டர் ஜார்ஜ் கே.ஜே, முன்னாள் இயக்குநர், மான்ஃபோர்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி.
4. பேரறிஞர் அண்ணா விருது - அ. சுப்பிரமணியன், முன்னாள் செயலாளர், ராமநாதபுரம் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம்.
5. பெருந்தலைவர் காமராஜர் விருது - தா.ரா தினகரன், அருப்புக்கோட்டை ஸ்ரீ ராமலிங்கா மில்ஸ், ஜெயவிலாஸ் குழுமத்தின் தலைவர்.
6. மகாகவி பாரதியார் விருது - முனைவர் சு பாலசுப்பிரமணியன் (எ) பாரதிபாலன், தமிழியல் துறைத் தலைவர், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்.
7. பாவேந்தர் பாரதிதாசன் விருது - கே. ஜீவபாரதி, எழுத்தாளர்- கவிஞர்
8. தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது - எழுத்தாளர் பாலகுமாரன், 
9. கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - தமிழறிஞர் மருதநாயகம்.
இந்த விருதுகளை சென்னை கலைவாணர் அரங்கில் ஜன. 16-ஆம் தேதி நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்க உள்ளார். விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், விருதுக்கான தகுதிச் சான்றிதழ் ஆகியவையுடன் பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப்படும். அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 50 பேருக்கு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் உதவித்தொகை ரூ.2,500, மருத்துவப்படி ரூ.100 பெறுவதற்கான அரசாணைகள் அளிக்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com