1,686 காவலர்களுக்கு முதல்வர் பதக்கம் அறிவிப்பு

காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 1,686 காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
1,686 காவலர்களுக்கு முதல்வர் பதக்கம் அறிவிப்பு

காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 1,686 காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைத் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு, காவல் துறையில் காவலர் மற்றும் தலைமைக் காவலர் நிலைகளில் 1,500 பணியாளர்களுக்கு தமிழக முதல்வர் காவல் பதக்கங்கள் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுநர் கம்மியர், ஓட்டுநர் தீயணைப்போர் மற்றும் தீயணைப்போர் ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும், சிறைத் துறையில் முதல்நிலை வார்டர்கள் (ஆண்கள்) 60 பேர்களுக்கும் முதல்வரின் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
இந்த பதக்கங்கள் பெறுபவர்களுக்கு மாதாந்திர பதக்கப் படி அவர்களின் நிலைகளுக்கு ஏற்ப 2018 பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் வழங்கப்படும் . இவர்கள் அனைவருக்கும் காவல்துறை இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை இயக்குநர் மற்றும் சிறைத்துறை தலைவரால் மாவட்டத் தலைநகரங்களில் பின்னர் நடைபெறும் அரசு விழாக்களில் பதக்கங்கள் வழங்கப்படும். 
அதிகாரிகளுக்குப் பதக்கங்கள்: காவல் வானொலி பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள், நாய் படைப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 அதிகாரிகள் என மொத்தம் 6 அதிகாரிகளுக்கு அவர்களது தொழிற்சிறப்பு மற்றும் மாசற்ற பணியை அங்கீகரிக்கும் வகையில் முதல்வரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம் வழங்கப்படுகிறது. இந்தப் பதக்கங்கள் பெறும் அதிகாரிகளுக்கு, ரொக்கத் தொகையாக காவலர் மற்றும் தலைமைக் காவலர் நிலையில் ரூ. 4,000, சார்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் நிலையில் ரூ.6,000, காவல் துணை கண்காணிப்பாளர் நிலையில் ரூ.10,000 வீதம் வழங்கப்படும். இதற்கென நடைபெறும் சிறப்பு விழாவில் முதல்வர் பங்கேற்று பதக்கங்களை வழங்குவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com