பொங்கல் திருநாள்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் திருநாள்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர்: தமிழக மக்களுக்கு எனது இதயம் கனிந்த பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகை நல்வாழ்த்துகள்.
அறுவடைத் திருவிழாவாம் பொங்கல் பண்டிகை தினத்தன்று அனைவர் குடும்பங்களிலும் மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும். இந்த நன்னாளில் இயற்கை நமக்கு அளித்த ஆசீர்வாதங்களுக்கும் தை மாதத் தொடக்கத்தில் கிடைத்த அபரிமிதமான அறுவடைக்கும் பிரார்த்தனையையும் நன்றியையும் செலுத்துவோம். இயற்கையைக் கொண்டாடும் நமது பாரம்பரியத்தையும் சம்பிரதாயங்களையும் தமிழக கலாசாரத்தையும் பெருமையுடனும் சிறப்புடனும் கடைப்பிடிப்போம்.
முதல்வர்: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். 
உலக மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளைப் போற்றிடும் திருநாளாகவும் உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் சூரிய பகவானுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நன்நாளாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 
இத்தகைய சிறப்புமிக்க பொங்கல் பண்டிகையை இன்புற்றுக் கொண்டாடி மகிழ்ந்திட, தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி சிறப்பித்துள்ளது. 
"உழன்றும் உழவே தலை' என்று வள்ளுவர் வேளாண்மையின் சிறப்பைக் கூறுகிறார். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த வேளாண் பெருமக்களின் வாழ்வு வளம் பெறும் வகையில், தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்த, விவசாயிகளுக்கு மானிய விலையில் நுண்ணீர்ப் பாசனக் கருவிகள், முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்குதல், தரமான சான்றுபெற்ற விதைகள் வழங்குதல், விவசாயத்திற்கு அடித்தளமான நீர்வள ஆதாரங்களைத் தூர்வாரி மேம்படுத்த குடிமராமத்துத் திட்டம், ஏரிகள் மற்றும் நீர்த் தேக்கங்களில் தூர்வாரும் போது கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்குகிறோம். 
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.5,318.73 கோடி கடன் தள்ளுபடி, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி நிவாரணத் தொகை, காப்பீட்டு நிறுவனங்களின் மூலம் ரூ.2,980 கோடி இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுத்தது உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை விவசாயிகளின் நல்வாழ்வுக்காக சீரிய முறையில் அரசு செயல்படுத்தி வருகிறது. 
அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைத்து நலன்களையும் வளங்களையும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com