காணும் பொங்கல்: மெரீனாவில் மக்கள் கூட்டம்: 1.80 லட்சம் பேர் வருகை

காணும் பொங்கலையொட்டி செவ்வாய்க்கிழமை மெரீனா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடற்கரைக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் குவிந்ததாக சென்னை காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன
காணும் பொங்கல்: மெரீனாவில் மக்கள் கூட்டம்: 1.80 லட்சம் பேர் வருகை

காணும் பொங்கலையொட்டி செவ்வாய்க்கிழமை மெரீனா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடற்கரைக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் குவிந்ததாக சென்னை காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னை, மெரினா கடற்கரையில் செவ்வாய்க்கிழமை காலையில் இருந்தே பொதுமக்கள் திரண்டனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள்தான் பொதுவாக காணும் பொங்கல் நாளில் மெரீனாவில் கூடுவது வழக்கம். கடந்த ஆண்டை போலவே இவ்வாண்டும், அதிக அளவிலான மக்களை மெரீனா கடற்கரையில் காண முடிந்தது. கடற்கரையில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் கடலில் இறங்கி குளிப்பதற்கு போலீஸார் தடை விதித்திருந்தனர். அண்ணா சமாதியில் தொடங்கி பட்டினப்பாக்கம் வரையில் சவுக்கு கட்டைகள் கட்டப்பட்டிருந்தன. இதைத் தாண்டி யாரும் உள்ளே சென்று விடக்கூடாது என்பதற்காக போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடற்கரையில் சவுக்கு கட்டைகளுக்கு உள்புறமாக பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
அண்ணா சதுக்கம், மெரீனா போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். கூட்டத்தை கண்காணிப்பதற்காக 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் பைனாகுலர் மூலம் கண்காணித்து வாக்கி டாக்கி வழியாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துக்கொண்டு இருந்தனர்.
மிக முக்கியமாக பொதுமக்கள் தங்களது குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று போலீஸார் எச்சரித்துக் கொண்டே இருந்தனர். உழைப்பாளர் சிலை அருகில் 2 இடங்களில் நிழலுக்காக பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.
காணாமல் போகும் குழந்தைகளை கண்டு பிடிக்க அவர்களின் கைகளில் வளையம் ஒன்று பொருத்தப்பட்டது. அதில் பெற்றோர்கள், போலீஸாரின் செல்லிடப்பேசி எண்கள் எழுதப்பட்டிருந்தன. பெற்றோர்கள் கண்காணிப்பில் இருந்து பிரிந்து சென்ற குழந்தைகள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களிலும் கூட்டம் அலை மோதியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com