முன்னாள் ராணுவத்தினர் கேண்டீனை இடமாற்றம் செய்யக் கூடாது

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் இயங்கி வரும் முன்னாள் ராணுவத்தினர் பொருள் கூடத்தை (கேண்டீன்) வேறு இடத்துக்கு மாற்றக் கூடாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்
முன்னாள் ராணுவத்தினர் கேண்டீனை இடமாற்றம் செய்யக் கூடாது

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் இயங்கி வரும் முன்னாள் ராணுவத்தினர் பொருள் கூடத்தை (கேண்டீன்) வேறு இடத்துக்கு மாற்றக் கூடாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பாளையங்கோட்டை பேருந்து நிலையத்துக்கு அருகே ராணுவத்தினர் நல அலுவலக வளாகத்தில் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் தற்போது பணியில் உள்ள ராணுவத்தினருக்கான கேண்டீன் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 8 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பத்தினர் மாதம்தோறும் இங்கு வந்து பொருள்கள் வாங்கிச் செல்கின்றனர். 
இந்நிலையில், தற்போதைய நிர்வாகம் இந்த கேண்டீனை சற்றும் பொருத்தம் இல்லாத வகையில் 8 கி.மீ. தூரத்தில் சங்கர்நகர் பகுதிக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 5 ஆம் தேதி முதல் பொருள்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. 
இவ்வாறு பேருந்து நிலையத்துக்கு அருகிலிருந்து வேறு இடத்துக்கு கேண்டீனை மாற்றுவதால், வயதானவர்கள் பொருள்களைச் சுமந்துகொண்டு அலைக்கழிக்கப்படும் நிலை உருவாகும். மேலும், இந்த இடமாற்றத்துக்கு எதிராக நெல்லை மாவட்ட முன்னாள் படைவீரர் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தடையாணை பெறப்பட்டுள்ளது. 
எனவே, நாட்டைப் பாதுகாக்கும் பணியில் இருக்கும் இவர்கள் சிரமமின்றி பொருள்கள் வாங்கிச் செல்லும் வகையில், தற்போது கேண்டீன் உள்ள இடத்திலேயே தொடர்ந்து செயல்பட மத்திய, மாநில அரசுகளும், தென் பிராந்திய ராணுவத் தலைமையகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com