வண்டலூர் உயிரியல் பூங்காவில் 5 குட்டிகளை ஈன்ற ஓநாய்!

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ஓநாய் 5 குட்டிகளை ஈன்றுள்ளது. 
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஓநாய் ஈன்ற குட்டிகள்.
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஓநாய் ஈன்ற குட்டிகள்.

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ஓநாய் 5 குட்டிகளை ஈன்றுள்ளது. 
வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972 -இன்படி அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்றாக ஓநாய் உள்ளது. வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம், கடந்த 1995 - ஆம் ஆண்டு முதல் ஓநாய்களை பராமரித்து வருகிறது. இந்த நிலையில், உதய்ப்பூர் பூங்காவிலிருந்து பெறப்பட்ட இரண்டரை வயதான (கீர்த்தி) பெண் ஓநாய் கடந்த டிசம்பர் மாதம் 6 -ஆம் தேதி 5 குட்டிகளை ஈன்றது. இவற்றில் 4 ஆண் குட்டிகள், 1 பெண் குட்டியாகும். இதுவே முதன்முறையாக இப்பூங்காவில் ஓநாய்களுக்கு பிறந்த குட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தாய் தன் 5 குட்டிகளையும் நல்லமுறையில் பாலூட்டி பராமரித்து வருகிறது. இந்தக் குட்டிகள் ஓநாய் இருப்பிட உள்வளாகத்தில் வியாழக்கிழமை விடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வெகுவிரைவில் இவை பூங்காவில் பார்வையாளர் பகுதிக்கு மாற்றப்படவுள்ளன. 
இக்குட்டிகளுடன் சேர்த்து, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 9 ஓநாய்கள் உள்ளன. வயது முதிர்ந்த ஓநாய்களுக்கு 3 முதல் 4 கிலோ மாட்டிறைச்சி தினமும் உணவாக கொடுக்கப்பட்டு வருகிறது என பூங்கா நிர்வாகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com