உழைக்கும் பெண்கள் சாதனையாளர் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு: ஊருணி அறக்கட்டளை வழங்குகிறது

சென்னை, குரோம்பேட்டை ஊருணி அறக்கட்டளை சார்பில், உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த 50 பெண்கள் நாடளவில் தேர்வு செய்யப்பட்டு சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.

சென்னை, குரோம்பேட்டை ஊருணி அறக்கட்டளை சார்பில், உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த 50 பெண்கள் நாடளவில் தேர்வு செய்யப்பட்டு சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.
இவ்விருது அனைத்துத் துறைகளிலும் பல்வேறு நிலைகளில் சிறந்து விளங்கும் பெண்களை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுவதாகும். உற்பத்தித் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பம், ஊடகம், பொழுதுபோக்கு , கலைத்துறை, சில்லறை வர்த்தகம், அரசு, அரசு சார்ந்த துறைகள், பொதுத் துறைகள், கல்வி, தொழில்முனைவோர், சுயதொழில், அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களில் சிறந்து விளங்குபவர்களுக்கு இவ்விருது முதன்முறையாக இந்த அறக்கட்டளை சார்பில் வழங்கப்படவுள்ளது.
பெண்கள் சமூகத்தில் பல்வேறு இன்னல்களுக்கிடையே சாதனை புரிந்த மகளிர் அடங்கிய நடுவர் குழு, இந்த சாதனைப் பெண்களை தேர்வு செய்யவுள்ளது. விருதுக்குத் தகுதியான பெண்கள் மற்றும் திருநங்கையர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரும் ஜன.31 ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன.
இதுதொடர்பாக ஊருணி அறக்கட்டளை நிறுவனர் ரத்தினவேல் ராஜன் கூறியது:
கல்வி, சுற்றுச்சூழல், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு சமூகத்தில் சமவாய்ப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளைக் குறிக்கோளாகக் கொண்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது.
இதில் பல்வேறு தனியார், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 120 பேர் தன்னார்வலர்களாக இணைந்து வார ஓய்வு நாள்களில் சேவைபுரிந்து வருகின்றனர்.
உலக அளவில் பணிக்குச் செல்லும் பெண்கள் சதவீதத்தில் இந்தியா 120-ஆவது இடத்தில் உள்ளது. நாட்டில் 27 சதவீதம் பெண்கள் குடும்பப் பொறுப்புகள், பல்வேறு இன்னல்களுக்கு இடையே பணிக்கு செல்கின்றனர். அவர்களின் திறமையையும்ஆர்வத்தையும் ஊக்குவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன என்றார் ரத்தினவேல் ராஜன்.
விருதுகளுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு www.oorunifoundation.com  என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு வரும் மார்ச் மாதம் 3-ஆம் தேதி சென்னை, சேத்துப்பட்டில் உள்ள எம்சிசி பள்ளியில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com