ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணி: ஆளுமைத் தேர்வுக்குப் பயிற்சி

குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு நடத்தப்படும் ஆளுமைத் தேர்வுக்கு செல்வதற்கான பயிற்சி அரசு சார்பில் அளிக்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கலாம்.

குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு நடத்தப்படும் ஆளுமைத் தேர்வுக்கு செல்வதற்கான பயிற்சி அரசு சார்பில் அளிக்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
குடிமைப் பணிகள் தேர்வில் ஆளுமைத் தேர்வுக்கு செல்லும் தகுதி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
2017-ஆம் ஆண்டு குடிமைப் பணிகள் முதன்மை தேர்வில் (யுபிஎஸ்சி) வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், மூன்று புகைப்படங்களுடன், மத்திய தேர்வாணைக் குழு முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகலுடனும், தங்களது பெயரையும், 
பிற விவரங்களையும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம், காஞ்சி, 163/1 பி.எஸ். குமாரசாமி ராஜா சாலை, சென்னை 028- என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 
விண்ணப்பப் படிவத்தை பயிற்சி மையத்தின் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். 
ஆளுமைத் தேர்வுக்கு, புதுதில்லி செல்லும் மாணவர்களுக்கு பயணப்படியாக ரூ.2 ஆயிரமும், பத்து நாள்கள் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்ளவும் இந்தப் பயிற்சி மையத்தால் ஏற்பாடுகள் செய்யப்படும். 
கூடுதல் விவரங்களுக்கு 044 - 2462 1909, 2462 1475 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com