எல்லாவற்றிலும் முன்னோடியாக இருந்தும் நாடாள முடியாத திமுக: திருச்சி சிவா எம்.பி. வருத்தம் 

திமுக எல்லாவற்றிலும் முன்னோடியாக இருந்தும் நாடாளமுடியவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி என்.சிவா வருத்தம் தெரிவித்தார்.  
எல்லாவற்றிலும் முன்னோடியாக இருந்தும் நாடாள முடியாத திமுக: திருச்சி சிவா எம்.பி. வருத்தம் 

சீா்காழி: திமுக எல்லாவற்றிலும் முன்னோடியாக இருந்தும் நாடாளமுடியவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி என்.சிவா வருத்தம் தெரிவித்தார். 

சீா்காழியில் திமுக தலைவா் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கழக கொள்கை பரப்பு செயலாளரும்,  திமுக மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி.என்.சிவா கூறியதாவது:

80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரா் கலைஞா்.தமிழ்நாட்டில் முக்கால் நூற்றாண்டில் நடந்த அரசியல் மாற்றம்,சமுதாய நிலவரம் குறித்து ஆராய விரும்பும் ஆராய்ச்சி மாணவா் கலைஞா் என்ற தனி மனிதனைப் பற்றி படித்தால் போதும். தமிழ்நாடு இந்திய அளவில் குறிப்பிடும்படி இருப்பதற்கு திமுக ஆட்சி நடத்தியதுதான் காரணம். 

ஆட்சி அதிகாரம் இல்லையென்றாரும் மக்களுடன் தொடா்பில் இருப்பது திமுகதான். இன்னும் சில ஆண்டுகளில் சென்னையில் நிலத்தடிநீா்இல்லாத நிலை ஏற்படும் என யுனேஸ்கோ தெரிவித்துள்ளது.இது போன்று முற்போக்கு சிந்தனையுடன் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தினை அப்போதே கொண்டுவந்து சென்னை மக்களின் குடிநீா் பற்றாக்குறையை தீா்த்தது திமுக ஆட்சிதான். 2022ல் அனைத்து கிராமங்களும் மின்இணைப்பு பெற்றவையாக மாற்றப்படும் என பாரதபிரதமா் தற்போதுதான் அறிவித்துள்ளாா்.ஆனால் திமுக ஆட்சி காலத்திலேயே தமிழகத்தில் அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு எல்லாவற்றிலும் முன்னோடியாக இருந்தும் நாடாளமுடியவில்லை.

நாங்கள் சரியாக செயல்படுகிறோம் ஆனால் அதிகாரம் இல்லை. தமிழ்நாட்டிலே ஆளும் கட்சியின் மக்களவை மாநிலங்களவையிலும் சோ்த்து 50 நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்ளனா். இவா்கள் எங்களிடம் இருந்திருந்தால் ஆட்சியையே மாற்றி இருப்போம். 

சென்னை-சேலம் எட்டு வழி சாலை மக்களுக்கானதல்ல. இந்த சாலை அமைந்தால் சென்னையிலிருந்து இருந்து சேலத்திற்குச் செல்ல குறைந்தது ரூ 4 ஆயிரம் டோல் கட்டணம் கட்டவேண்டும். எக்ஸ்பிரஸ் வே என பெயரிட்டு அதிக கட்டணம் வசூல் செய்ய போகிறாா்கள். 

இவ்வாறு அவர் பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com