சென்னைப் பல்கலை. இலவசக் கல்வித் திட்டம்: 272 பேர் சேர்க்கை

சென்னைப் பல்கலைக்கழக இலவசக் கல்வித் திட்டத்தின்கீழ் 272 மாணவ, மாணவிகள் பல்வேறு கலைக் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற்றுள்ளனர்.

சென்னைப் பல்கலைக்கழக இலவசக் கல்வித் திட்டத்தின்கீழ் 272 மாணவ, மாணவிகள் பல்வேறு கலைக் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற்றுள்ளனர்.
சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தத் திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பி.துரைசாமி கல்லூரி சேர்க்கைக் கடிதங்களை வழங்கினார். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாத ஏழை மாணவர்கள், கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் குழந்தைகள் பயன்பெறும் வகையில், கடந்த 2010 -11 ஆம் ஆண்டு முதல் இலவச கல்வித் திட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகம் நடைமுறைப்படுத்தி வருகிறது.
2018-19 -ஆம் கல்வியாண்டில் இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற 721 பேர் விண்ணப்பித்தனர். இதில் 569 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். நேர்முகத் தேர்வில் 347 பேர் பங்கேற்றனர். இவர்களில் 272 பேர் தேர்வு செய்யப்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் அமைந்திருக்கும் 83 கல்லூரிகளில் பல்வேறு படிப்புகளில் சேருவதற்கான சேர்க்கைக் கடிதம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com