ஸ்டொ்லைட்  போராட்டம்: மக்கள் அதிகாரம் அமைப்பின் ஆலோசகருக்கு ஜாமீன் 

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதுரை வழக்குரைஞா் வாஞ்சிநாதனுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன்... 
ஸ்டொ்லைட்  போராட்டம்: மக்கள் அதிகாரம் அமைப்பின் ஆலோசகருக்கு ஜாமீன் 

மதுரை: தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதுரை வழக்குரைஞா் வாஞ்சிநாதனுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்றற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் தொடா் போராட்டம் நடத்திவந்தனா். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தின்போது போலீஸாா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 போ் உயிரிழந்தனா். 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இதைத்தொடா்ந்து நடந்த கலவரத்தில் ஏராளமான வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. 

இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்தனா். மேலும் தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரத்தை தூண்டியதாக 'மக்கள் அதிகாரமும் அமைப்பின் சட்ட ஆலோசகரான மதுரை வழக்குரைஞா் வாஞ்சிநாதன் மீது தூத்துக்குடி சிப்காட் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இந்த வழக்குகளில் இருந்து முன்ஜாமீன் கோரி வழக்குரைஞா் வாஞ்சிநாதன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. இதையடுத்து வழக்குரைஞா் வாஞ்சிநாதனை போலீஸாா் கடந்த வாரம் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டொ்லைட் போராட்ட வழக்குகளில் இருந்து ஜாமீன் வழங்கக்கோரி வழக்குரைஞா் வாஞ்சிநாதன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, வழக்குரைஞா் வாஞ்சிநாதன் மதுரையில் தங்கி இருக்க வேண்டும். ஸ்டொ்லைட் ஆலை தொடா்பான ஆா்ப்பாட்டம், போராட்டங்களில் பங்கேற்க கூடாது. ஸ்டொ்லைட் ஆலை தொடா்பான வழக்குகளில் சம்மன் அனுப்பினால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் ஆகிய நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com