பேரருவியில் குளிப்பதற்காக நீண்டவரிசையில் காத்து நின்ற சுற்றுலாப் பயணிகள்.
பேரருவியில் குளிப்பதற்காக நீண்டவரிசையில் காத்து நின்ற சுற்றுலாப் பயணிகள்.

குற்றால அருவிகளில் அலைமோதிய சுற்றுலாப் பயணிகள்

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால், அனைத்து அருவிகளிலும் கூட்டம் அலைமோதியது. ஆனால், குறைந்த அளவே தண்ணீர்

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால், அனைத்து அருவிகளிலும் கூட்டம் அலைமோதியது. ஆனால், குறைந்த அளவே தண்ணீர் விழுந்ததால் வரிசையில் நின்றே குளிக்க முடிந்தது.

குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக சாரல் மழை இல்லாததால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர்வரத்து வெகுவாகக் குறைந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நின்று குளித்துச் செல்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அனைத்து அருவிகளிலும் கூட்டம் அலை மோதியது. பேரருவியில் குறைந்த அளவே தண்ணீர் விழுந்ததால், ஆண்கள் வரிசையானது வாகனம் நிறுத்துமிடம் வரையிலும், பெண்களின் வரிசை இரண்டாவது நடைபாலம் வரையிலும் நீண்டிருந்தது. ஐந்தருவியிலும், பழைய குற்றாலம் அருவியிலும் சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.

குற்றாலம்-ஐந்தருவி, குற்றாலம்-பழைய குற்றாலம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குற்றாலத்தில் காலை முதல் மேகமூட்டமும், அவ்வப்போது மிதமான சாரலும் காணப்பட்டது. நாள் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com