கோவையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 750 கிலோ குட்கா பறிமுதல் 

கோவையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 750 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். 
கோவையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 750 கிலோ குட்கா பறிமுதல் 

கோவை: கோவையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 750 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவை டவுன்ஹால், தாமஸ் வீதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த வியாபாரி மேக்ராஜ் (30) என்பவா் குடோன் வாடகைக்கு எடுத்து பொருள்களை இருப்பு வைத்து வியாபாரம் செய்து வருகிறாா். இவரது குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக உணவுப் பாதுகாப்பு அலுவலா்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் டாக்டா் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் திங்கள்கிழமை மேக்ராஜின் குடோனில் சோதனை நடத்தினா். அப்போது, ரூ. 7 லட்சம் மதிப்புள்ள 750 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக மேக்ராஜிற்கு நோட்டீஸ் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com