அரசியல் குறித்து ராகுல் காந்தியுடன் முக்கிய சந்திப்பு - பா.ரஞ்சித்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை,  செவ்வாய்க்கிழமை தில்லியில் சந்தித்தபோது அரசியல் குறித்து பேசியதாக  இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
அரசியல் குறித்து ராகுல் காந்தியுடன் முக்கிய சந்திப்பு - பா.ரஞ்சித்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசன் தில்லியில் செவ்வாய்கிழமை சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து ரஞ்சித் ட்விட்டரில் கருத்து பகிர்ந்துள்ளார். 

அதில் அவர், "ராகுல் காந்தியுடன் அரசியல் மற்றும் கலை குறித்து ஒரு முக்கிய சந்திப்பு. மதச்சார்பற்ற அரசியலமைப்பின் மையத்தை அச்சுறுத்தும் சாதி மற்றும் மதச்சாயல் குறித்து உரையாடினோம். என்னை சந்தித்தமைக்கு நன்றி. இந்த உரையாடல் செயல்வடிவம் பெறுவதை எதிர்நோக்கி இருக்கிறேன். அனைத்து சிந்தாந்த தரப்பு மக்களையும் ஒரு தேசியத் தலைவர் சந்திப்பது என்பது வரவேற்கத்தக்கது" என்றார்.   

முன்னதாக, இந்த சந்திப்பு குறித்து ராகுல் காந்தி கூறுகையில் ட்வீட் செய்திருந்தார். 

இந்த சந்திப்பு திரைத்துறை அல்லாது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மிக முக்கியமான ஒரு சந்திப்பாகவே பார்க்கப்படுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com