விதிமுறை மீறியுள்ளதா ஈஷா...? அம்பலப்படுத்தும் சிஏஜி அறிக்கை

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இருக்கும் ஈஷா யோகா மையம் விதிமுறை மீறலில் ஈடுபட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை வெளியிட்டுள்ளது.  
விதிமுறை மீறியுள்ளதா ஈஷா...? அம்பலப்படுத்தும் சிஏஜி அறிக்கை

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இருக்கும் ஈஷா யோகா மையம் விதிமுறை மீறலில் ஈடுபட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை வெளியிட்டுள்ளது. 

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஜக்கி வாசுதேவ் ஈஷா யோகா மையம் நடத்தி வருகிறார். ஈஷா யோகா மையம் மீது பல வருடங்களாகவே இது விதிமுறை மீறி கட்டப்பட்டது, காடுகளை அழிக்கிறது, யானைகள் பாதையை மறிக்கிறது என இயற்கைக்கு எதிரான மையம் என்ற வகையில் பல விமரிசனங்கள் வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி தினமான திங்கள்கிழமையன்று, ஈஷா விதிமுறை மீறலில் ஈடுபட்டுள்ளதாக தலைமை கணக்கு தணிக்கையாளர்(சிஏஜி) சார்பில் ஒரு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.   

அந்த அறிக்கையில், சிஏஜி கூறியிருப்பதாவது, 

"பூலுவப்பட்டி கிராமத்தில் கிராம பஞ்சாயத்து அனுமதியுடன் ஈஷா மையம் 1994 - 2008 ஆண்டுகளில் 32,856 சதுர அடிக்கு பல்வேறு கட்டிடங்களை கட்டியுள்ளது. ஆனால், இந்த கட்டுமானங்கள் மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம் (ஹெச்ஏசிஏ) இருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறமால் கட்டப்பட்டுள்ளது. 

மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் பணி, மலைப் பகுதிகளில் இடம்பெறும் வளர்ச்சி பணிகள் சூழலியலுக்கு ஏற்றத்தக்கதா என்பதை உறுதி செய்வது தான். 2003-இன் அரசு உத்தரவுப்படி கிராமங்களில் வணிக மற்றும அலுவல் கட்டிடங்களை கட்டுவதற்கு ஹெச்ஏசிஏ அனுமதி கட்டாயமாகும்.  

அக்டோபர் 2011-இல், ஈஷா மையம் வனத் துறையை தடையில்லா சான்றிதழ் மற்றும் எக்ஸ்-போஸ்ட் ஃபேக்டர் அப்ரூவல்(ex-post factor approval) வழங்கக் கோரியும் கோரிக்கை வைத்துள்ளனர். 

இதன்பிறகு, 2012-இல் வனத்துறை அதிகாரி ஈஷா மையத்துக்கு சென்ற போது, ஹெச்ஏசிஏ அனுமதி இல்லாமல் கிராம பஞ்சாயத்தின் அனுமதியை மட்டும் வைத்துக் கொண்டு 11,873 சதுர அடிக்கு 2005-2008 ஆண்டுகளில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதை கண்டறிந்தார். 

கள மதிப்பீடு அறிக்கையின்படி, இந்த மையம் ஹெச்ஏசிஏ அனுமதி இல்லாமல் தொடர்ந்து கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளது. பிப்ரவரி 2013-இல் தடையில்லாச் சான்றிதழுக்கான கோரிக்கை வனத்துறையினரால் நிராகரிக்கப்பட்டது. அதன்பிறகு, கட்டுமானங்களை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று குறிப்பிட்டுள்ளது.  

இதன்மூலம், ஜக்கி வாசுதேவின் ஈஷா மையம் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை மூலம் வெளியாகியுள்ளது. அதைவிட அதிர்ச்சியளிக்கும் வகையில் இருப்பது, ஈஷா விதிமுறை மீறி கட்டப்பட்டதை அறிந்தும் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 

இதே ஈஷா மையத்தில் நிறுவப்பட்ட ஆதியோகி சிலை திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com