கர்நாடகாவின் தண்ணீர் கர்நாடகாவுக்கே: இப்படி சொன்ன எடியூரப்பாவுக்கு ராமதாஸின் அதிரடி டிவீட்

கர்நாடக மாநிலத்தில் உருவாகும் தண்ணீர் கர்நாடகமே பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய எடியூரப்பாவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
கர்நாடகாவின் தண்ணீர் கர்நாடகாவுக்கே: இப்படி சொன்ன எடியூரப்பாவுக்கு ராமதாஸின் அதிரடி டிவீட்

கர்நாடக மாநிலத்தில் உருவாகும் தண்ணீர் கர்நாடகமே பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய எடியூரப்பாவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கேஎஸ்ஆர் அணைகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கன மழை பெய்து வரும் நிலையில் இரு அணைகளும் நிரம்பிவிட்டன. தற்போது அணைக்கு வரும் முழு நீர்வரத்தும் அப்படியே அணையில் திறந்துவிடப்படுகிறது.

நேற்று கபினி அணைக்கு வந்த 50 ஆயிரம் கன அடி நீரும் மொத்தமாக காவிரியில் திறந்து விடப்பட்டது. இதனால் காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடகாவில் உற்பத்தியாகும் தண்ணீர் முழுவதையும் கர்நாடகமே பயன்டுத்திக் கொள்ள வகை செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் எடியூரப்பா கூறியிருந்தார்.

இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், "கர்நாடகத்தில் உருவாகும் தண்ணீரை கர்நாடகமே பயன்படுத்திக் கொள்ள வகை செய்ய வேண்டும்: எடியூரப்பா - இந்த பெரிய மனிதன் ஆட்சிக்கு வந்திருந்தால் தான் தமிழகத்துக்கு தடையில்லாமல் காவிரி தண்ணீர் கொடுத்திருப்பாராம்!"

மற்றொரு டிவீட்டில், "கர்நாடகத்தில் உருவாகும் தண்ணீரை கர்நாடகமே பயன்படுத்திக் கொள்ள வகை செய்ய வேண்டும்: எடியூரப்பா - இப்போது கூட ஒன்னும் பிரச்சினை இல்லை. கர்நாடக அணைகள் அனைத்தையும் மூடி காவிரி ஆற்றில் வரும் வெள்ளத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்!" என்று தெரிவித்துள்ளார்.

அணைகள் நிரம்பி உபரி நீரை வெளியேற்றுவதற்குக் கூட மனமில்லாத எடியூரப்பா, ஆட்சிக்கு வந்திருந்தால், கர்நாடகமே வெள்ளக்காடாக ஆனாலும், தமிழகத்துக்குத் தண்ணீர் விட்டிருக்கமாட்டார் போல என சமூக வலைத்தளங்களில் விமரிசிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com