விளையாட்டு மைய விடுதிகளில் மாணவர் சேர்க்கை: வரும் 18 -இல் இரண்டாம் கட்டத் தேர்வு

முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் காலியாக உள்ள இடங்களுக்கான விளையாட்டுகளில் பயிற்சி பெற 6, 7, 8 -ஆம் வகுப்பு சிறுவர், சிறுமியர்களுக்கு மாநில அளவிலான

முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் காலியாக உள்ள இடங்களுக்கான விளையாட்டுகளில் பயிற்சி பெற 6, 7, 8 -ஆம் வகுப்பு சிறுவர், சிறுமியர்களுக்கு மாநில அளவிலான இரண்டாம் கட்ட தேர்வு வரும் 18 -ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் சிறுவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளும், சென்னை, ஈரோடு ஆகிய இடங்களில் சிறுமியர்களுக்கான இந்த விளையாட்டு மைய விடுதிகளும் செயல்படுகின்றன.
இவற்றில் காலியாக உள்ள இடங்களுக்கான விளையாட்டுகளில் பயிற்சி பெற 6, 7, 8-ஆம் வகுப்புகளில் பயிலும் சிறுவர், சிறுமியர்கள் சேர்க்கைக்கு, மாநில அளவிலான இரண்டாம்கட்ட தேர்வு, வரும் 18 -ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளது.
போட்டி தேர்வு நடைபெறும் இடங்கள்: டேக்வோண்டா (ஆண்கள்), ஜிம்னாஸ்டிக்ஸ் (ஆண்கள், பெண்கள்), மேசைப்பந்து (பெண்கள்), நீச்சல் (ஆண்கள்), தடகளம் (ஆண்கள், பெண்கள்) ஆகிய விளையாட்டுகளுக்கான போட்டிகள், சென்னை, பெரியமேடு, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெறுகின்றன.
இறகுப் பந்து (ஆண்கள், பெண்கள்) போட்டி சென்னை, நேரு பூங்கா விளையாட்டு வளாகத்திலும், டென்னிஸ் (ஆண்கள்) போட்டி சென்னை, நுங்கம்பாக்கம், டென்னிஸ் விளையாட்டரங்கிலும் நடைபெறுகின்றன.
விளையாட்டில் சிறந்து விளங்கும் ஆர்வம் உள்ள மாணவ, மாணவியர் 2018 -19 ஆம் ஆண்டு சேர்க்கைக்கு உரிய படிவங்களை வியாழக்கிழமை (ஜூலை 12) முதல் அனைத்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்களை அணுகி இலவசமாக 
பெற்றுக் கொள்ளலாம். www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேசிய மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 18 -ஆம் தேதி காலை 8 மணிக்குள் மாநிலத் தேர்வு மையத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com