சட்டப்பேரவைக்குள் கஞ்சா பொட்டலங்களுடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!

கஞ்சா, புகையிலைப் பொருள்களுடன் புதுவை சட்டப்பேரவைக்குள் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கஞ்சா, புகையிலைப் பொருள்களுடன் வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்.
கஞ்சா, புகையிலைப் பொருள்களுடன் வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்.

கஞ்சா, புகையிலைப் பொருள்களுடன் புதுவை சட்டப்பேரவைக்குள் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவை சட்டப்பேரவையில் வியாழக்கிழமை பூஜ்ய நேரத்தில் பேரவை அதிமுக குழுத் தலைவர் ஆ. அன்பழகன் பேசியதாவது:
புதுவை மாநிலத்தில் போதைப் பொருள்கள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுகின்றன. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் கஞ்சா போன்றவை தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன. 
இதனால், 15 முதல் 25 வயது வரையிலான ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். (அப்போது கஞ்சா, புகையிலைப் பொருள்களின் பொட்டலங்களை எடுத்து வந்து சட்டப்பேரவையில் காண்பித்தார். தொடர்ந்து, அவர் அவற்றை பேரவைத் தலைவரிடம் ஒப்படைத்தார்.)
முதல்வர் நாராயணசாமி: காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு பொறுப்பேற்றவுடன் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் முதல் கட்டமாக லாட்டரி சீட்டுகள் ஒழிக்கப்பட்டதில் ஓரளவு வெற்றி பெற்றோம். அடுத்து ரெளடிகளை கட்டுப்படுத்துவதிலும் வெற்றி கண்டோம். 
மூன்றாவதாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். விழுப்புரத்தில் இருந்து ரயில் மூலமும், திருவண்ணாமலையில் இருந்து மோட்டார் சைக்கிள்கள் மூலமும் கஞ்சா எடுத்து வரப்படுகிறது.
பெரியார் நகர், உப்பளம் தொகுதிகளில் சில இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தகவல் வருகிறது. இதுவரை 9 கிலோவுக்கும் மேல் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அன்பழகன்: போதைப் பொருள்களை ஒழிக்க தனிப் பிரிவு தொடங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுக் கொறடா அனந்தராமன்: தமிழகத்தைப் போல, புதுவையில் போதைப் பொருள்கள் தடுப்புப் பிரிவு இல்லை. காவல் துறையில் இதற்கான பிரிவை ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com