பேரறிவாளன் விடுதலை: ராகுல் காந்தி கருத்துக்கு அற்புதம்மாள் வரவேற்பு

பேரறிவாளன் விடுதலைக்கு தடையாக இருக்க மாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்திடம் தெரிவித்துள்ள கருத்துக்கு பேரறிவாளனின் தாயார்
பேரறிவாளன் விடுதலை: ராகுல் காந்தி கருத்துக்கு அற்புதம்மாள் வரவேற்பு

பேரறிவாளன் விடுதலைக்கு தடையாக இருக்க மாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்திடம் தெரிவித்துள்ள கருத்துக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இயக்குநர் பா.ரஞ்சித் அண்மையில் சந்தித்தார். அப்போது, பேரறிவாளன் விடுதலைக்கு உதவி செய்ய வேண்டும் என ராகுல் காந்தியிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
அதற்கு பேரறிவாளன் விடுதலைக்கு தனிப்பட்ட முறையில் நான் தடையாக இருக்க மாட்டேன். எனது தந்தை கொலை தொடர்பான சதித் திட்டங்கள் மற்றும் சட்ட சிக்கல்களுமே விடுதலைக்கு தடையாக இருக்கும் என்று கருதுவதாக ராகுல் காந்தி கூறியதாக பா.ரஞ்சித் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தினமணி செய்தியாளரிடம் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கூறியதாவது:
பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் காந்தியே பேரறிவாளன் விடுதலைக்கு தடையாக இருக்க மாட்டேன் என்று 2-ஆவது முறையாகத் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தெரிவித்த கருத்தால் பலதரப்பட்ட மக்களும் பேரறிவாளன் விடுதலையை வலியுறுத்துவது இதன்மூலம் உறுதியாகி உள்ளது.
எனவே, பேரறிவாளன் விடுதலையை செயல் வடிவமாக மாற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com