ஜூலை 17 முதல் கோவை - சேலம் ரயில்சேவை ரத்து

திருப்பூர்-கோவை இடையே தண்டவாளப் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட இருப்பதால், ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரையில் கீழ்க்கண்ட தேதிகளில் இரு வழித்தடங்களிலும்
ஜூலை 17 முதல் கோவை - சேலம் ரயில்சேவை ரத்து

திருப்பூர்-கோவை இடையே தண்டவாளப் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட இருப்பதால், ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரையில் கீழ்க்கண்ட தேதிகளில் இரு வழித்தடங்களிலும்  கோவை- சேலம் பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளது. மேலும் சில மாற்ற்ங்கள் செய்யப்பட உள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
கோவை- சேலம் பயணிகள் ரயில் :
திருப்பூர்- கோவை இடையே தண்டவாளம் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், ஜூலை 17, 19, 23, 26, ஆகஸ்ட் 2, 3 ஆகிய தேதிகளில் கோவை- சேலம், சேலம்- கோவை (வண்டி எண்கள்: 66602, 66603) ஆகிய பயணிகள் ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 
ஜூலை 17:  எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு வரை செல்லும் இன்டர் சிட்டி விரைவு ரயில் (12678),  கோவையில் இருந்து சென்னை செல்லும் கோவை விரைவு ரயில் (12676),  திருவனந்தபுரத்தில் இருந்து கேரக்பூர் செல்லும் விரைவு ரயில் (12512),  மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் விரைவு ரயில் (16860),  திருவனந்தபுரத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் சபரி விரைவு ரயில் (17229),  பாலக்காட்டில் இருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரயில் (66608) ஆகியவை சூலூரில் 15 நிமிடங்கள் நின்று செல்லும். 
ஜூலை 19: ஆழப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் விரைவு ரயில் (13352) கோவை ரயில் நிலையத்தில் 85 நிமிடங்கள் நின்று பிற்பகல் 1.25 மணி அளவில் புறப்படும்.  எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு செல்லும் கேஎஸ்ஆர் விரைவு ரயில் (12678) கோவை ரயில் நிலையத்தில் 45 நிமிடங்கள் நின்று பிற்பகல் 1.35 மணி அளவில் புறப்படும். அதேபோல்,  சென்னை எழும்பூரில் இருந்து மங்களூர் சந்திப்பு விரைவு ரயில் (16858),  தன்பாத்தில் ஆழப்புழா செல்லும் விரைவு ரயில் (13351),  ஹைதராபாத்தில் இருந்து எர்ணாகுளம் செல்லும் சிறப்பு ரயில் (07117),  ஷாலிமரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் (22642),  கேஎஸ்ஆர் பெங்களூருவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரயில் (12677),  சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை வரும் கோவை விரைவு ரயில் (12675),  சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை வரும் சதாப்தி விரைவு ரயில் (12242) ஆகியவை சூலூரில் 15 நிமிடங்கள் நின்று செல்லும். 
ஜூலை 23:   கோவையில் இருந்து சென்னை செல்லும் கோவை விரைவு ரயில் (12676),  கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் சதாப்தி விரைவு ரயில் (12244),  திருவனந்தபுரத்தில் இருந்து கோரக்பூர் செல்லும் ரயில் (22648),  மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் விரைவு ரயில் (16860),  திருவனந்தபுரத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் சபரி விரைவு ரயில் (17229)  பாலக்காட்டில் இருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரயில் (66608) ஆகியவை இருகூர் ரயில் நிலையத்தில் 15 நிமிடங்கள் நின்று செல்லும். 
ஜூலை 26:  ஜெய்பூரில் இருந்து கோவை செல்லும் சபரி விரைவு ரயில் (12970) ஈரோடு ரயில் நிலையத்தில் 30 நிமிடங்கள் நின்று செல்லும். அதே போல்,  கோவையில் இருந்து சென்னை செல்லும் கோவை விரைவு ரயில் (12676),  கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் சதாப்தி விரைவு ரயில் (12244),  திருவனந்தபுரத்தில் இருந்து கோரக்பூர் செல்லும் விரைவு ரயில் (22648),   மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் விரைவு ரயில் (16860),  திருவனந்தபுரத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் சபரி விரைவு ரயில் (17229) ஆகியவை இருகூரில் 15 நிமிடங்கள் நின்று செல்லும். 
ஜூலை 28:  ஆழப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் விரைவு ரயில் (13352) கோவை ரயில் நிலையத்தில் 70 நிமிடங்கள் நின்று பிற்பகல் 1.10 மணி அளவில் புறப்படும்.  எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு செல்லும் விரைவு ரயில் (12678) கோவை ரயில் நிலையத்தில் 35 நிமிடங்கள் நின்று பிற்பகல் 13.25 மணி அளவில் புறப்படும். 
அதேபோல,  சென்னை எழும்பூரில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயில் (16859),  தன்பாத்தில் இருந்து ஆலப்புழா செல்லும் விரைவு ரயில் (13351),  பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் (22644),  கேஎஸ்ஆர் பெங்களூருவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் (12677),  சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் கோவை விரைவு ரயில்  (12675) ஆகியவை இருகூர் ரயில் நிலையத்தில் 15 நிமிடங்கள் நின்று செல்லும். 
ஜூலை 30:  ஆழப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் விரைவு ரயில் (13352) கோவை ரயில் நிலையத்தில் 70 நிமிடங்கள் நின்று பிற்பகல் 1.10 மணி அளவில் புறப்படும்.  எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு செல்லும் கேஎஸ்ஆர் விரைவு ரயில் (12678) கோவையில் 35 நிமிடங்கள் நின்று பிற்பகல் 1.25 மணி அளவில் புறப்படும். 
சென்னை எழும்பூரில் இருந்து மங்களூர் சந்திப்பு செல்லும் விரைவு ரயில் (16859),   தன்பாத்தில் இருந்து ஆழப்புழா செல்லும் விரைவு ரயில் (13351),  கேஎஸ்ஆர் பெங்களூரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் (12677), சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் கோவை விரைவு ரயில் (12675) ஆகியவை இருகூரில் 15 நிமிடங்கள் நின்று செல்லும். 
ஆகஸ்ட் 2:  ஜெய்பூரில் இருந்து கோவை செல்லும் அதிவிரைவு ரயில் (12970) ஈரோடு சந்திப்பில் 40 நிமிடங்கள் நின்று செல்லும். 
ஆகஸ்ட் 4:  கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் விரைவு ரயில் (12676),  கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் சதாப்தி விரைவு ரயில் (12244), திருவனந்தபுரத்தில் இருந்து இந்தூர் செல்லும் ரயில் (22646), மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் விரைவு ரயில் (16860),  திருவனந்தபுரத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் சபரி விரைவு ரயில் (17229),  பாலக்காட்டில் இருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரயில்  (66608)ஆகியவை பீளமேடு ரயில் நிலையத்தில் 15 நிமிடங்கள் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com