"குமரி சரக்குப் பெட்டக முனையத்தால் மீனவர்களுக்கு பாதிப்பில்லை': பொருளாதார நிபுணர் 

கன்னியாகுமரி பகுதியில் அமையவிருக்கும் சர்வதேச சரக்குப் பெட்டக முனையத்தால் மீனவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என பொருளாதார நிபுணர் வி. ஜெபமாலை வினாஞ்சி ஆராச்சி   தெரிவித்தார்.
"குமரி சரக்குப் பெட்டக முனையத்தால் மீனவர்களுக்கு பாதிப்பில்லை': பொருளாதார நிபுணர் 

கன்னியாகுமரி பகுதியில் அமையவிருக்கும் சர்வதேச சரக்குப் பெட்டக முனையத்தால் மீனவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என பொருளாதார நிபுணர் வி. ஜெபமாலை வினாஞ்சி ஆராச்சி   தெரிவித்தார்.
குமரியைச் சேர்ந்தவரான இவர் கடந்த 1987 முதல் 2009 வரை ஐக்கிய நாடுகள் தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் மூத்த பொருளாதார நிபுணராக பணியாற்றியவர். 2016ஆம் ஆண்டு முதல் தென்னிந்திய அனுபவம் அறக்கட்டளையின் தலைவராக செயல்பட்டு வருகிறார். 
கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியது: ஒரு நாடு விவசாயம் மற்றும் தொழில் துறையில் முன்னேற்றம் பெற வேண்டுமென்றால் சாலை கட்டமைப்பு, நீர்வளம், மின்சார வசதி, விமானப் போக்குவரத்து, துறைமுகங்கள், ரயில் போக்குவரத்து ஆகியன தன்னிறைவு பெற்று விளங்க வேண்டும். அந்த வகையில் இன்றைய மத்திய அரசு சிறப்பிடம் பெற்றுள்ளது. 
கன்னியாகுமரி பகுதியில் அமையவிருக்கும் சர்வதேச சரக்குப் பெட்டக முனையம் நாட்டின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கச் செய்யும் சிறந்த திட்டமாகும். இந்த திட்டத்தால் இங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய மீன்பிடித் துறைமுகங்கள் அமையவிருப்பதால் மீனவர்கள் தங்கள் தொழிலை பாதுகாப்புடன் மேற்கொள்ளலாம். துறைமுகத்துக்கான விரிவாக்கம் நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியைச் சுற்றி அமைவதால் தென்மாவட்ட மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். 
குமரி மாவட்டத்தைப் பொருத்தவரை கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பல்வேறு சிறப்பு மிகுந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். திருவனந்தபுரம்-கன்னியாகுமரி நான்குவழிச் சாலைத் திட்டம் முழுமைபெறும் பட்சத்தில் சுற்றுலாத் தொழில் மிகவும் வளர்ச்சி பெறும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com